Saturday, 26 March 2011

INTERNET NEWS

இணையதளம் வடிவமைக்க உதவும் ஓன்லைன் எடிட்டர்
இணையதள வடிவமைப்புக்கு உதவும் மொழிகளில் அடிப்படை மொழியான HTML மொழியை எழுதும் போதே உடனுக்கூடன் சோதித்து தெரிந்து கொள்ளும் பொருட்டு ஓன்லைன் மூலம் ஒரு HTML எடிட்டர் வந்துள்ளது. [மேலும்]


 நாம் பயன்படுத்திய இணைய இணைப்பின் அளவை அளவிட....
 இணைய இணைப்பை பலரும் பயன்படுத்தி வருகின்றோம். ஒரு சிலரே unlimited இணைப்பு பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பயன்படுத்தினோம் என பயந்து கொண்டே இருக்கின்றோம். [மேலும்]


 இணையத்தில் தரவிறக்கம் செய்யப்பட்ட அனைத்து கோப்புகளையும் கண்டறிய
 இணையத்தில் இருந்து நாம் நிறைய வகையான கோப்புகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோம். [மேலும்]



 ஆடியோ மற்றும் வீடியோக்களை மாற்றம் செய்ய அருமையான மென்பொருள்
 ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கின்றன. [மேலும்]



 ஸ்பாம் இ-மெயில் வலை அமைப்பை மைக்ரோசாப்ட் வீழ்த்தியது
தேவையற்ற தகவல்களை திணிக்கும் ஸ்பாம் இ-மெயில் பாட்னெட் வலையமைப்பை மைக்ரோசாப்ட் கார்ப்ரேஷன் வீழ்த்தியது. [மேலும்]



 வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் இணையதளம்
 வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது. ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத் தோன்றுகிறது. [மேலும்]



 தொலைபேசி எண்ணை வைத்தே இருக்கும் இடத்தை ஓன்லைன் மூலம் கண்டறிய

 தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்முடைய தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம். [மேலும்]


 உங்கள் இணையதளம் சரியாக இயங்குகிறதா என்பதை அறிய
ஐபேட்டின் வேகமான வளர்ச்சி தற்போது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருந்து வரும் நிலையில் நம் இணையதளம் ஐபேட்டில் சரியாகத் தெரிகிறதா என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம். [மேலும்]


 இணையத்தில் அனைத்திற்கும் தனித்தனி பட்டன்கள்
இண்டர்நெட் பட்டன்களால் ஆகியிருந்தால் எப்படி இருக்கும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா? [மேலும்]



 கூகுள் மற்றும் பேஸ்புக் பக்கம் செல்ல வேண்டாம்
முதலில் கூகுள் அதன் பிறகு பேஸ்புக், யூடியூப், டிவிட்டர், ஜிமெயில். இப்படி தினந்தோறும் விஜயம் செய்யும் இணையதளங்களின் பட்டியல் எல்லோருக்குமே உண்டு. [மேலும்]


 லோகோ உருவாக்க நினைப்பவர்களுக்கு உதவும் இணையம்
புதிதாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் முதல் வேலையாக செய்வது லோகோ என்று சொல்லக் கூடிய நிறுவனத்திற்கான ஒரு அடையாள சின்னம் உருவாக்குவது தான். [மேலும்]


(MSN)எம்.எஸ்.என் ஹொட்மெயிலில் மின்னஞ்சல்கள் மாயம்
பிரபல மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் ஒன்றான மைக்ரோசொப்ட்டின் எம்.எஸ்.என் ஹொட்மெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்த பல மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக முறைபாடுகள் செய்துள்ளனர். [மேலும்]

கூகுளை முந்தியது பேஸ்புக்:
 இணையதள ஜாம்பவனான கூகுள் சர்ச் இஞ்ஜினை முந்தி முதன்முறையாக பேஸ்புக் சாதனை படைத்துள்ளது. அமெரி்க்காவில், கூகுள் சர்ச் இஞ்ஜினைக் காட்டிலும் பேஸ்புக் இணையதள‌த்தை அதிகம் பயன்படுத்தி உள்ளனர். [மேலும்]


இணையத்தின் பிடியிலிருந்து சிறுவர்களை எப்படி பாதுகாக்கலாம்?
  இணையம் என்பது உலகலாவில் பரந்துபட்ட ஓர் வலையமைப்பு ஆகும். இணையத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் காணக்கிடைத்தாலும் அதற்கு நிகராக தீய விடயங்களும் காணப்படத்தான் செய்கின்றன. [மேலும்]


இணையதளத்தின் எதிர்கால இதயம் சீனா : கூகுள்
இணையதளத்தின் எதிர்கால இதயம் சீனா. தேடுதல் தவிர வரைபடம் மற்றும் விளம்பரம் போன்ற பிற பகுதிகளும் சீனாவில் 'கூகுள்' வளர்ச்சி பெறுவதற்கான இடங்களாக திகழ்கின்றன' என, 'கூகுள்' நிறுவனம் கூறியுள்ளது. [மேலும்]


ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்!


 விடுமுறை காலம் நெருங்குகிறது. புத்தாண்டு தொடங்க இருக்கிறது. பொங்கல் வர இருக்கிறது. மக்கள் தங்கள் மனங்கவர்ந்த, இதுவரை திட்டமிட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள். [மேலும்]


புது வசதிகளுடன் மாற்றங்களுடன் பேஸ்புக்



 சமூக வலைப்பின்னல் உலகில் தினம் தினம் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்திவரும் பேஸ்புக் தற்போது புரொபைல் பேஜ் வடிவத்தினை மாற்றியமைத்துள்ளதுடன், வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்]

 Google Earth 6.. துல்லியமான 3D வசதியுடன்
 கூகிள் நிறுவனத்தின் அற்புதத்தில் ஒன்றான Google Earth ன் புதிய பதிப்பான Google Earth 6 இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய பதிப்பின் மூலம் உலகத்தை இன்னும் உண்மையாக காணக்கூடியதாக உள்ளது. [மேலும்]




அனோமதேய திருடர்களிடமிருந்து தப்பித்து கொள்ள
இணையம்,கணணி என்பவற்றின் உச்ச பயன்களை அனுபவிக்கும் நமது தனிப்பட்ட ரகசிய தகவல்களை கொள்ளையிடும் நோக்கில் கொள்ளையர்கள் நமது கணணிகளை குறிவைத்து Vvirus,Trojan,Worms,Spyware,Adware போன்ற எண்ணிலடங்கா ஆபத்தான மென் பொருள்களை ஏவி விடுகின்றனர். [மேலும்]

பேஸ்புக் மூலம் சிகிச்சை அளித்த மருத்துவர்
 பேஸ்புக் பிரிந்தவர்களை சேர்த்து வைத்திருக்கிறது. சேர்ந்திருப்பவர்களை விவாகரத்து பெறவும் செய்கிறது. சில நேரங்களில் உயிர் காக்கவும் உதவியிருக்கிறது. [மேலும்]


ஒரே நேரத்தில் 20 லட்சம் ஒலிகளை கேட்டு மகிழ.....
 உலகில் பல வகையான ஒலிகள் உள்ளன. இவை அனைத்தையும் நாம் கேட்பதில்லை. இந்த இயந்திர உலகில் இவற்றை தேடி கேட்டு இரசிக்கவும் நமக்கு நேரம் இல்லை. [மேலும்]


 புதிய மாற்றங்களுடன் பேஸ்புக்........ 
பேஸ்புக் இணைய தளத்தின் மிகச் சிறந்த சேவைகளில் ஒன்றான பேஸ்புக் பேஜ்(facebook page) தற்போது புதிய வடிவில் வெளிவந்துள்ளது. [மேலும்]



 காதலர்களுக்கான ஒரு இணையதளம்.......

ஒரு இணையதளத்தின் வெற்றிக்கு அதன் பெயருக்கும் முக்கிய பங்கு உண்டு. எனவே தான் இணைய உலகில் வெற்றி பெற நினைப்பவர்கள் முதலில் அசத்தலான பெயரை தேட முற்படுகின்றனர். [மேலும்]




எச்சரிக்கை: பேஸ்புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்

 நீங்கள் வலையில் இருந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எவ்வாறு இருக்கும். [மேலும்]


 கூகுள் உதவியுடன் இணையதளங்கள் அனைத்தையும் மொபைலில் பார்க்க.....


 எத்தனை பேருக்கு சொந்தமாக இணையதளம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த எண்ணிகை சொற்பமாக தான் இருக்க வேண்டும். [மேலும்]



 பேஸ்புக் முகவரியை மாற்ற வேண்டுமா?

  நம்மில் பெரும்பாலனவர்கள் பேஸ்புக் எண்ணும் சமூக வலை தளத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். [மேலும்]




கூகுள் குரோமை விடவும் மிகச் சிறந்த இலவச பிரவுசர்.

 Google chrome மற்றும் Internet Explorer யை விட சிறந்த, வேகமான இணைய உலாவி ஒன்று உள்ளது... என்னவாக இருக்கும் என பார்கிரீர்களா? அதன் பெயர்தான் Maxthon 3.0 [மேலும்]


 உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமா?



பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா? [மேலும்]


surf2gether: யூடியூப் வீடியோவை பார்வையிட்டவாறே நண்பருடன் சோ்ந்து அரட்டை அடிப்பதற்கு
  இணையத்தில் யூடியூப் வீடியோ ஒன்றை நண்பருடன் சேர்ந்து பார்வையிட வேண்டுமெனில் நாம் செய்வது என்னவென்றால், அதன் முகவரியை கொடுத்து பார்வையிடச் சொல்வோம். [மேலும்]


இணையதளத்தின் IP முகவரியை கண்டறிய...
 எந்தவொரு இணையதளத்தின் IP முகவரியையும் பின்வரும் முறையை பயன்படுத்தி கண்டறியலாம். [மேலும்]





 பேஸ்புக் நிறுவனரின் கணக்கு களவு போன பரிதாபம்!

 பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் விசிறிகள் பக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹேக்கர்கள் களவாடப்பட்டுள்ளது. [மேலும்]



 டிவிட்டரில் மன்னிப்பு கேட்டு ஒரே நாளில் பிரபலமான மனிதர்
  ஒரே ஒரு டிவீட்(டிவிட்டர் பதிவு) பல மாயங்களை செய்யக்கூடும். இந்த மாயங்களுக்கு பல உதாரணங்களும் இருக்கின்றன. [மேலும்]



 உங்களின் திட்டங்களை பகிர்ந்து கொள்ள
 மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள விரும்பினால் பேஸ்புக்கில் துவங்கி டிவிட்டர் வரை நிறைய தளங்கள் இருக்கின்றன. அதே போல உங்களது திட்டங்களையும் இணையம் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். [மேலும்]


ஏழு பிரம்மாண்டங்கள் இணைந்த ஒரே தளம்
தேடு பொறி என்றதும் நாம் உடனடியாக உடனடியாக சொல்வது கூகுள் மட்டும் தான். ஆனாலும் பல தேடு பொறிகள் கூகுளிடம் இல்லாத தகவல்களையும் நமக்கு கொடுக்கிறது. [மேலும்]


 உங்களது ஆங்கில சொற்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?

 ஓன்லைன் மூலம் எண்ணற்ற பல சேவைகள் இன்றும் நமக்கு கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இன்று ஆங்கில Vocabulary -ஐ மேம்படுத்துவதற்கு வசதியாக ஓன்லைன் மூலம் விளையாடும் விளையாட்டு வந்துள்ளது. [மேலும்]


 பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் பெற
 நாம் மிகவும் சிரமப்பட்டு பதிவை எழுதுவோம். அப்படி எழுதிய பதிவை தவறுதலாக அழித்து விடுவோம். அதை மறுபடியும் எந்த ஒரு மென்பொருட்கள் துணையும் இல்லாமல் கொண்டுவரலாம். [மேலும்]


ஜிமெயிலை முழுவதுமாக பேக்கப் எடுக்கும் முறை
 அண்மையில் தீடிரென்று பலரது ஜிமெயில் கணக்குகளில் இருந்த மின்னஞ்சல் அனைத்தும் தவறுதலாக கூகிள் நிறுவனத்தால் அழிக்கப்பட்டதாக சர்ச்சைகள் உருவானது. [மேலும்]


 புதிய வகையில் கண்டுபிடிக்கப்பட்ட சொற்களஞ்சியம்
 பொதுவாக டிக் ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில், அதே மொழியில் விளக்கம் அளிக்கப்படும். [மேலும்]



 உங்கள் பேஸ்புக் நண்பர்களை கூகுள் மேப்பில் காண வேண்டுமா?
 பேஸ்புக் நண்பர்களின் ஜியோகிராபிக் லோக்கேஷனை கூகிள் மேப்பில் தெரியும் படி செய்வதற்கு உதவி செய்கிறது ஒரு தளம். [மேலும்]



 அரட்டை அடிப்பவர்களுக்கான இணையதளம்
 அதிகம் பேசுபவர்களை விட்டு விடுங்கள், எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே கருத்து சொல்பவர்களையும் விட்டுத்தள்ளுங்கள். [மேலும்]



பேஸ்புக்கில் ஓன்லைனில் இருப்பதை மற்றவர்களிடமிருந்து மறைக்க

 பேஸ்புக்கானது நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விடயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். [மேலும்]


ஓன்லைனில் 20 ஜி.பி வரை தகவல்களை பறிமாறிக் கொள்ள

 இணையத்தை பயன்படுத்தும் அனைவருமே நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக் கொள்வோம். அந்த வகையில் தகவல்களை ஓன்லைன் மூலமாக பறிமாறிக் கொள்ள பல்வேறு தளங்கள் உள்ளன. [மேலும்]


 எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் ஓன்லைனில் புகைப்படங்களை அழகுபடுத்த
 நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை அழகாக Cut செய்து கொள்ளும் விருப்பம் நம் அனைவரிடமும் இருக்கும். [மேலும்]



 எதையும் விரைவாக செய்ய வழிகாட்டும் இணையம்


 எதையும் விரைவாக செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள். அதாவது தற்போது செய்து கொண்டிருக்கும் செயலை மிகவும் விரைவில் முடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? [மேலும்]


 கூகுளுக்கு போட்டியாக போர்லுக்
கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்களில் ஒரே நேரத்தில் மற்றும் ஒரே இடத்தில் தேட உதவும் தேடியந்திரம் இது. [மேலும்]

இணையதளம் வடிவமைக்க உதவும் ஓன்லைன் எடிட்டர்

இணையதள வடிவமைப்புக்கு உதவும் மொழிகளில் அடிப்படை மொழியான HTML மொழியை எழுதும் போதே உடனுக்கூடன் சோதித்து தெரிந்து கொள்ளும் பொருட்டு ஓன்லைன் மூலம் ஒரு HTML எடிட்டர் வந்துள்ளது.
தற்போது இணையதளத்தை தாமாகவே வடிவமைப்பதில் பலதரப்பட்ட மக்களிடத்திலும் விருப்பம் அதிகமாகி வருகிறது. இணையதள வடிவமைப்பின் அடிப்படை மொழியான HTML கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு HTML பற்றிய அடிப்படை அறிவை உடனடியாக வளர்ப்பதற்காக ஒரு தளம் நமக்கு உதவுகிறது.
சாதாரண Notepad ல் கூட நாம் Html மொழியை தட்டச்சு செய்து நம் உலாவில் சோதித்து பார்க்கலாம். ஆனால் இந்தத் தளத்திற்கு சென்று இடது பக்கம் Html மொழியை தட்டச்சு செய்தால் உடனடியாக வலது பக்கத்தில் Output உடனுக்கூடன் காட்டப்படுகிறது.
Html மொழி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு Html கட்டளையும் உலாவியில் எப்படி இயங்குகிறது என்று உடனடியாக சரிபார்க்கலாம். இணையதளத்தின் அடிப்படை மொழியை கற்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி

இணையதளம் வடிவமைக்க உதவும் ஓன்லைன் எடிட்டர்

இணையதள வடிவமைப்புக்கு உதவும் மொழிகளில் அடிப்படை மொழியான HTML மொழியை எழுதும் போதே உடனுக்கூடன் சோதித்து தெரிந்து கொள்ளும் பொருட்டு ஓன்லைன் மூலம் ஒரு HTML எடிட்டர் வந்துள்ளது.
தற்போது இணையதளத்தை தாமாகவே வடிவமைப்பதில் பலதரப்பட்ட மக்களிடத்திலும் விருப்பம் அதிகமாகி வருகிறது. இணையதள வடிவமைப்பின் அடிப்படை மொழியான HTML கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு HTML பற்றிய அடிப்படை அறிவை உடனடியாக வளர்ப்பதற்காக ஒரு தளம் நமக்கு உதவுகிறது.
சாதாரண Notepad ல் கூட நாம் Html மொழியை தட்டச்சு செய்து நம் உலாவில் சோதித்து பார்க்கலாம். ஆனால் இந்தத் தளத்திற்கு சென்று இடது பக்கம் Html மொழியை தட்டச்சு செய்தால் உடனடியாக வலது பக்கத்தில் Output உடனுக்கூடன் காட்டப்படுகிறது.
Html மொழி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு Html கட்டளையும் உலாவியில் எப்படி இயங்குகிறது என்று உடனடியாக சரிபார்க்கலாம். இணையதளத்தின் அடிப்படை மொழியை கற்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி

நாம் பயன்படுத்திய இணைய இணைப்பின் அளவை அளவிட

இணைய இணைப்பை பலரும் பயன்படுத்தி வருகின்றோம். ஒரு சிலரே unlimited இணைப்பு பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பயன்படுத்தினோம் என பயந்து கொண்டே இருக்கின்றோம்.
இந்த மென்பொருள் அந்த குறையை முற்றிலும் நீக்கி விடுகின்றது. இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவியவுடன் உங்கள் கணணியின் நேரத்திற்கு அருகில் சின்ன கணணி ஐகான் தோன்றும். இதை ரைட் கிளிக் செய்யவும்.
இதில் முதலில் உள்ளது Settings. இதை கிளிக் செய்யவும். இதில் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள் இருக்கும். அடுத்துள்ள கட்டத்தில் Month Start Day வில் நீங்கள் அன்றைய திகதியை நிரப்பி கொள்ளவும்.
அடுத்துள்ள கட்டத்தில் Dont track between these times எதிரில் உள்ள Enable கிளிக் செய்து நேரத்தை அமைத்துக் கொள்ளவும். அடுத்துள்ளது Monthly Settings இதை கிளிக் செய்யவும். இதில் ஒவ்வொரு மாதத்தின் அப்லோடு மற்றும் டவுண்லோடு அளவுகளை பார்த்துக் கொள்ளலாம்.
அளவுகளை எம்.பி அல்லது ஜி.பி யில் பார்த்துக் கொள்ளலாம். அதே போல் நீங்கள் இந்த ஐகான் மீது வைத்து லெப்ட்கிளிக் செய்தால் அப்போதைய அளவு, இன்றைய அளவு மற்றும் அந்த மாதத்திய அளவினை எளிதில் பார்த்துக் கொள்ளலாம்.
உங்கள் செட்டிங்ஸ் ஏற்றவாறு அளவுகள் வரும். எனவே செட்டிங்ஸ்ஸை கவனமாக செய்யவும்.
தரவிறக்க சுட்டி

இணையத்தில் தரவிறக்கம் செய்யப்பட்ட அனைத்து கோப்புகளையும் கண்டறிய

இணையத்தில் இருந்து நாம் நிறைய வகையான கோப்புகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோம்.
இதில் மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய நிறைய தளங்கள் உள்ளன. அதனை கூகுளில் சென்றாலே கண்டறிந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆனால் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஒரு சில நேரங்களில் கூகுளில் தேடினால் சரியான இணையம் கிடைப்பதில்லை.
அந்த குறையை போக்க ஒரு அருமையான தளம் உள்ளது. இந்த தளத்தில் நீங்கள் தேடும் கோப்புகளுக்கு இணைய முகவரி மட்டுமே கிடைக்கும்.
இணைய தளங்களான Rapidshare, Mega upload, 4Shared, Mediafire, Hotfile மேலும் பல தளங்களில் இருந்து நமக்கு வேண்டிய கோப்புகளின் இணைய முகவரிகளை துல்லியமாக நமக்கு தருகிறது.
இனி நமக்கு தேவையான கோப்புகளை சுலபமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தேடி அலைய வேண்டியதில்லை.
இணையதள முகவரி

ஆடியோ மற்றும் வீடியோக்களை மாற்றம் செய்ய அருமையான மென்பொருள்

ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கின்றன.
இதோ மீண்டும் ஒரு இலவச மென்பொருள். இந்த மென்பொருளின் உதவியுடன் ஆடியோ மற்றும் வீடியோக்களை மாற்றம் செய்வது மட்டுமல்லாமல் கட் செய்தும் கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.
நாம் ஆடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அதற்கென தனி மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வீடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அதற்கொரு மென்பொருள் என ஒவ்வொரு பணிகளையும் செய்ய தனித்தனி மென்பொருளை நாட வேண்டிவரும்.
இந்த இரண்டு பணிகளையும் ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் போட்டோக்களை கொண்டு Slide Show யும் உருவாக்கி கொள்ள முடியும்.
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் வீடியோ மற்றும் ஆடியோவை உங்கள் விருப்பபடி கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
மாற்றம் செய்வது மட்டுமல்லாமல் கட் மற்றும் ஜாயினும் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் நாம் avi, mpg, tod, mov, dv, rm,3gp, 3g2, 3gp2,flv, swf, mp4,wmv, mkv, qt, ts, mts போன்ற வீடியோ பைல்களை உள்ளினைத்து கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளில் இருந்தவாறே டிவீடி ரைட்டிங்கும் செய்து கொள்ள முடியும்.இதனால் இந்த மென்பொருளை சிறந்ததொரு மென்பொருள் என்று கூறமுடியும்.இந்த மென்பொருளின் உதவியுடன் படத்தில் குறிப்பிட்டுள்ள பைல் பார்மெட்களில் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளானது வீடியோ, ஆடியோ, மற்றும் போட்டோக்களை மாற்றம் செய்வது மட்டுமல்லாமல் எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும். நாம் இந்த மென்பொருளில்  மாற்றம் செய்யும் பைல்களை நேரிடையாக டிவீடிக்களில் ரைட்டிங் செய்து கொள்ள முடியும். Youtube வீடியோ URL யை உள்ளிட்டு வீடியோவை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.
DVD க்களை உள்ளிட்டு அதில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோவையும் இந்த மென்பொருளின் துணையுடன் கன்வெர்ட் மற்றும் எடிட்டிங் செய்து கொள்ள முடியும். மொத்ததில் இந்த மென்பொருளை கொண்டு ஆடியோ, வீடியோவை மிக எளிதாக மாற்றம் செய்யவும் எடிட் செய்யவும் இந்த மென்பொருளானது சிறந்ததாகும்.
இனி ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்வதை விட்டுவிட்டு ஒரே மென்பொருளின் துணையுடன் அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.
தரவிறக்க சுட்டி