இந்த மென்பொருள் அந்த குறையை முற்றிலும் நீக்கி விடுகின்றது. இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவியவுடன் உங்கள் கணணியின் நேரத்திற்கு அருகில் சின்ன கணணி ஐகான் தோன்றும். இதை ரைட் கிளிக் செய்யவும்.
இதில் முதலில் உள்ளது Settings. இதை கிளிக் செய்யவும். இதில் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள் இருக்கும். அடுத்துள்ள கட்டத்தில் Month Start Day வில் நீங்கள் அன்றைய திகதியை நிரப்பி கொள்ளவும்.
அடுத்துள்ள கட்டத்தில் Dont track between these times எதிரில் உள்ள Enable கிளிக் செய்து நேரத்தை அமைத்துக் கொள்ளவும். அடுத்துள்ளது Monthly Settings இதை கிளிக் செய்யவும். இதில் ஒவ்வொரு மாதத்தின் அப்லோடு மற்றும் டவுண்லோடு அளவுகளை பார்த்துக் கொள்ளலாம்.
அளவுகளை எம்.பி அல்லது ஜி.பி யில் பார்த்துக் கொள்ளலாம். அதே போல் நீங்கள் இந்த ஐகான் மீது வைத்து லெப்ட்கிளிக் செய்தால் அப்போதைய அளவு, இன்றைய அளவு மற்றும் அந்த மாதத்திய அளவினை எளிதில் பார்த்துக் கொள்ளலாம்.
உங்கள் செட்டிங்ஸ் ஏற்றவாறு அளவுகள் வரும். எனவே செட்டிங்ஸ்ஸை கவனமாக செய்யவும்.
தரவிறக்க சுட்டி
No comments:
Post a Comment