Friday, 25 March 2011

டிவிட்டரில் மன்னிப்பு கேட்டு ஒரே நாளில் பிரபலமான மனிதர்

ஒரே ஒரு டிவீட்(டிவிட்டர் பதிவு) பல மாயங்களை செய்யக்கூடும். இந்த மாயங்களுக்கு பல உதாரணங்களும் இருக்கின்றன.
சமீபத்திய உதாரணம் அமெரிக்க வாலிபர் ஒருவர் தன்னால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்கு டிவிட்டரில் மன்னிப்பு கேட்டு ஹீரோவாகியிருக்கிறார். சியாட்டல் நகரை சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் மைக்கேல் மைக்கேலிட்டி.
சமீபத்தில் ஒரு நாள் காலையில் அவர் சியாட்டல் நெடுஞ்சாலையில் தனது பி.எம்.டபில்யூ காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடுவழியில் அவரது கார் மக்கர் செய்தது. போகிற வழியில் நிறுவன டீலர்ஷிப் இருக்கும். அங்கு பழுது பார்த்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் அவர் மெதுவாக காரை ஓட்டிச் செல்ல சிறுதி நேரத்திலேயே கார் முழுவதும் பழுதாகி சாலை நடுவிலேயே நின்று விட்டது.
பரபரப்பான நெடுஞ்சாலையில் நடுவழியில் கார் நின்றால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள். பின்னே வரிசையாக வந்து கொண்டிருந்த வாகன‌ங்கள் ஒலி எழுப்பி கொண்டிருக்க மற்ற வாகன‌ங்கள் கொஞ்சம் பக்கவாட்டில் வந்து முன்னேறி செல்ல முயன்று கொண்டிருந்தன. மைக்கேல் பதட்டத்தோடு கார் நிறுவனத்திற்கு போன செய்துவிட்டு உதவிக்கு காத்திருந்தார்.
ஆனால் இது போன்ற நேரத்தில் பொதுவாக எல்லோரும் செய்யக்கூடியதை போல போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக அதிருப்தியையும், கோபத்தையும் தெரிவிக்கும் சகவாகன ஓட்டிகளிடம் சண்டை போட்டுக் கொண்டு நிற்கவில்லை.
மாறாக அவர் உள்ள படியே தன்னால் ஏற்பட்ட பாதிப்பிறகு மனம் வருந்தினார். காரை இழுத்துச் செல்ல உதவி கிடைக்கும் வரை வேறு எதுவும் செய்ய முடியாது என்னும் நிலையில் அவர் டிவிட்டரில் இது பற்றி தன் நிலையை பகிர்ந்து கொள்ள விரும்பினார்.
சியாட்டல் நெடுஞ்சாலையில் நடுவே போக்குவரத்தை மறித்த படி ஒரு கார் நின்று கொண்டிருக்கிறது. அந்த கார் என்னுடையது தான். என‌க்கும் இதில் வருத்தம் தான் என்று தெரிவிக்கும் பதிவு ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டார்.
கிட்டத்தட்ட டிவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்று கூட சொல்லலாம். ஆனால் யாரிடம் என்று குறிப்பாக இல்லாமல் பொதுவாக தனது வருத்ததை டிவிட்ட‌ரில் அவர் பகிர்ந்து கொண்டார்.
டிவிட்டரில் அந்த பதிவை படித்தவர்கள் அவரது நிலையை புரிந்து கொண்டவர்கள் போல அதனை திரும்பவும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர். இவர்களில் வாஷிங்டன் போக்குவரத்து அலுவலக அதிகாரியும் அடக்கம். அந்த அதிகாரி மறுடிவீட் செய்ததோடு மைக்கேலுக்கு இடம் அளிக்கும் படியும் வாகன ஓட்டிகளை கேட்டுக் கொண்டார்.
20 நிமிடங்களில் பலர் அந்த செய்தியை மறு வெளியீடு செய்யவே நூற்றுக்கணக்கானோர் இந்த‌ சம்பவம் பற்றி தெரிந்து கொண்டனர். அவரது நிலையையும் புரிந்து கொண்டனர். ஒரு சிலர் அவருக்கு ஆறுதலும் தெரிவித்தனர். அரை மணி நேரத்தில் அவரது கார் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்தும் சீரானது.
இதற்குள் அவருக்கு டிவிட்டரில் புதிய நம்பர்களும் கிடைத்திருந்தனர். கார் பழுது பார்க்கப்பட்டு வந்த பிறகு அத‌னையும் டிவிட்டரில் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து கொண்டார். டிவிட்டரில் மன்னிப்பு கேட்ட இந்த சம்பவத்தை நாளிதழ்களும் செய்தியாக வெளியிட்டன. அதோடு தொலைக்காட்சியிலும் பேட்டி கண்டு ஒளிபரப்பினர்.
மைக்கேல் இந்த ஆதரவையும் புகழையும் எதிர்பார்த்திருக்கவில்லை. எந்த வித திட்டமிடலும் இல்லாமல் இயல்பாக தனது நிலையை டிவிட்டரில் அவர் பகிர்ந்து கொண்டார். ஆனால் அதற்கு பலரும் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் காண்பித்த பரிவு அவரை நெகிழ வைத்து விட்டது.
தனது மகிழ்ச்சியையும் டிவிட்டர் வழியே பகிர்ந்து கொண்டார். அது மட்டும் அல்லாமல் டிவி பேட்டியில் தன்னை பார்த்த பழைய நண்பர்கள் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஸ்பீடு பிரேக்கருக்கு தனது பெயரை வைக்க வேண்டும் என்று சகோதரர் கூறியதாகவும் அவர் மகிழ்ச்சியோடும் குறிப்பிட்டிருந்தார்.
மைக்கேல் டிசைனராக இருக்கிறார். டீப்கிரேசாங் டாட் காம் என்ற பெயரில் இணையதளம் ஒன்றையும் வைத்திருக்கிறார். இந்த விவரம் எல்லாம் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. ஆனால் டிவிட்டரில் போக்குவரத்து பாதிப்புக்காக மன்னிப்பு கேட்டது அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கி விட்டது.

உங்களின் திட்டங்களை பகிர்ந்து கொள்ள

மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள விரும்பினால் பேஸ்புக்கில் துவங்கி டிவிட்டர் வரை நிறைய தளங்கள் இருக்கின்றன. அதே போல உங்களது திட்டங்களையும் இணையம் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
ஷேர்டு டிஸ்கஷன் இணையதளம் இதற்கான என்றே துவங்கப்பட்டுள்ளது. கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சரி. ஆனால் திட்டங்களை ஏன் இணையம் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படக்கூடும். விடயம் என்னவென்றால் திட்ட‌ங்க‌ளை இந்த‌ த‌ள‌த்தின் வ‌ழியே ப‌கிர்வ‌த‌ன் மூல‌ம் அவ‌ற்றை திற‌ம்ப‌ட‌ நிர்வ‌கிக்க‌ முடியும்.
உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் பிற‌ந்த‌ நாள் நிக‌ழ்ச்சியையோ அல்லது கிரிக்கெட் போட்டியையோ ந‌ட‌த்த‌ திட்ட‌மிட்டுள்ளீர்க‌ள் என்று வைத்து கொள்வோம். அந்த‌ நிக‌ழ்ச்சிக‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளை ந‌ண்ப‌ர்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ள‌ இந்த‌ த‌ள‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.
உங்க‌ள் நிக‌ழ்ச்சிக்காக‌ என்று ஒரு இணைய‌ ப‌க்க‌த்தை இந்த‌ த‌ள‌த்தின் மூலம் மிக சுலபமாக‌ துவ‌க்கி விட‌லாம். சொல்லப் போனால் உங்களுக்கான இணையபக்கத்தை அமைத்து கொள்வது இமெயில் முகவரியை உருவாக்கி கொள்வதை விடவும் சுலபமானது.
முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு வகையான திட்டமிடலுக்கும் என தனித்தனி பகுதி உள்ளன. அதில் உங்களுக்கான வகையை தேர்வு செய்து கிளிக் செய்து விட்டு உங்கள் பெயர் மற்றும் நிகழ்ச்சியின் பெயரை குறிப்பிட்டீர்கள் என்றால் புதிய இணைய பக்கம் உருவாகி விடும்.
அதன் பிற‌கு அதில் நிகழ்ச்சி தொடர்பான மற்ற விவரங்களை சேர்த்து கொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தையும் கூகுல் வரைபடத்தில் குறிப்பிட முடியும். நிகழ்ச்சி தொடர்பான முழு விரங்களையும் இடம் பெற வைக்கலாம். அது தொடர்பான இணைய முகவரி இருந்தாலும் இணைப்பு கொடுக்கலாம்.
வேறு கோப்புகள் இருந்தாலும் இணைத்து கொள்ளலாம். பின் உங்கள் நண்பர்களுக்கு இந்த இணைப்பை அனுப்பி வைத்து நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்கலாம். நண்பர்கள் கருத்து தெரிவிக்கும் வசதியும் உண்டு என்பதால் நிகழ்ச்சி பற்றி விவாதித்து அத‌னை மேலும் சிறப்பாக திட்டமிடலாம்.
இந்த இணைய பக்கத்தை நண்பர்கள் மட்டுமே பார்க்ககூடிய வகையில் கட்டுப்படுத்த முடியும். எனவே நிகழ்ச்சிகள் தொடர்பான விவரஙகள் வேறு யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கலாம். சுற்றுலா  செல்ல பயண திட்டங்க‌ளை ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தலாம்.
கைவ‌ச‌ம் உள்ள‌ பொருட்க‌ளை விற்ப‌னை செய்வ‌த‌ற்காக‌வும் இந்த‌ த‌ள‌த்தை பயன்ப‌டுத்த‌லாம். இந்த த‌ளத்தை ஒரு முறை பயன்படுத்தி பார்த்தால் இது எத்த‌னை சிறப்பானது என்று புரிய வரும். அதன் பின் பல விதங்களில் இதனை பயன்படுத்தி இன்புறலாம்.
இணையதள முகவரி

ஏழு பிரம்மாண்டங்கள் இணைந்த ஒரே தளம்

தேடு பொறி என்றதும் நாம் உடனடியாக உடனடியாக சொல்வது கூகுள் மட்டும் தான். ஆனாலும் பல தேடு பொறிகள் கூகுளிடம் இல்லாத தகவல்களையும் நமக்கு கொடுக்கிறது.
இதற்காக நாம் ஒவ்வொறு தளமாக சென்று தேட வேண்டாம். ஒரே தளத்தில் இருந்து கொண்டு நாம் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போதே பல தளங்களின் முடிவுகளை இந்த தளம் கொடுக்கிறது.
7 பிரம்மாண்ட தளங்களின் துணையுடன் நாம் தேடும் வார்த்தைக்கே உதவி செய்ய ஒரு தளம் இருக்கிறது. கூகுள், யாகூ, ஆஸ்க், விக்கிப்பிடியா, அன்சஸ்வர்ஸ்.கொம், யூடியுப், அமேசான் போன்ற அனைத்திலும் இண்ஸ்டண்ட் ஆக தேடக்கூடிய வார்த்தைக்கு உதவி செய்கிறது.
இந்த தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேட வேண்டுமோ அதற்கான வார்த்தையை கொடுத்ததும், தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைகான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும்.
இதிலிருந்து நாம் எந்த தளத்தில் தேட வேண்டுமோ அந்த தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம். தேடுவதற்கு நேரம் இல்லை என்று சொல்லும் அனைவருக்கும் இந்த தளம் தேடும் நேரத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இணையதள முகவரி

உங்களது ஆங்கில சொற்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?

ஓன்லைன் மூலம் எண்ணற்ற பல சேவைகள் இன்றும் நமக்கு கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இன்று ஆங்கில Vocabulary -ஐ மேம்படுத்துவதற்கு வசதியாக ஓன்லைன் மூலம் விளையாடும் விளையாட்டு வந்துள்ளது.
எந்த ஒரு மொழியிலும் சொல்வளம் தெரிந்தால் அந்த மொழியில் நாம் வல்லவர்களாக இருக்கலாம். இதே போல் தான் ஆங்கில மொழியில் சொல்வளம்(Vocabulary) அதிகரிக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
எதையும் விளையாட்டாக கூறினால் பலரும் ஏற்றுக் கொள்வர் என்பதை மனதில் கொண்டு ஆங்கில சொல்வளத்தை வைத்து ஓன்லைன் விளையாட்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு நுழையலாம்.
ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் முதல் Expert வரை அனைவரும் தங்களுக்கு தகுந்தபடி Level ஐ தேர்ந்தெடுத்து விளையாடலாம்.
தினமும் டிக்ஸ்னரியில் பல வார்த்தைகள் படிப்பதை கொள்கையாக வைத்திருப்பவர்கள் இனி ஓன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த விளையாட்டை விளையாடி தங்களின் Vocabulary அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
இணையதள முகவரி

பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் பெற

நாம் மிகவும் சிரமப்பட்டு பதிவை எழுதுவோம். அப்படி எழுதிய பதிவை தவறுதலாக அழித்து விடுவோம். அதை மறுபடியும் எந்த ஒரு மென்பொருட்கள் துணையும் இல்லாமல் கொண்டுவரலாம்.
இதில் இரண்டு வழிகள் உள்ளன. நாம் ஏதேனும் போஸ்ட்டை delete செய்த பிறகு, நாம் அந்த விண்டோவை மூடாமல் அல்லது அந்த டேபை மூடாமல் அதே இடத்தில் இருந்தால் நம்முடைய பிரவுசரின் Back பட்டனை அழுத்துவதன் மூலம் அதை திரும்பவும் நம் தளத்திருக்கு கொண்டுவரலாம். நீங்கள் அழித்த பதிவு வரும் வரை back பட்டனை அழுத்தி கொண்டே இருங்கள்.
நீங்கள் எந்த பிரவுசரில் பதிவை delete செய்தீர்களோ அந்த பிரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள். இதில் Ctrl+H ஒன்றாக அழுத்துங்கள் உங்களுக்கு history விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான delete செய்த பதிவை பாருங்கள்.
முக்கியமானது நீங்கள் எந்த தேதியில் delete செய்தீர்கள், எந்த நேரத்தில் delete செய்தீர்கள் என்று தெரிந்தால் தேடுவதற்கு சுலபமாக இருக்கும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.
விண்டோவில் காட்டியிருப்பதை போல தான் delete செய்த பகுதி இருக்கும். உங்கள் பதிவை கண்டுபிடித்தவுடன் அந்த லிங்கை கிளிக் செய்யவும். இது தான் நீங்கள் தேடிய பதிவு என்பதை உறுதி செய்து கொண்டு காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளவும்.

ஜிமெயிலை முழுவதுமாக பேக்கப் எடுக்கும் முறை

அண்மையில் தீடிரென்று பலரது ஜிமெயில் கணக்குகளில் இருந்த மின்னஞ்சல் அனைத்தும் தவறுதலாக கூகிள் நிறுவனத்தால் அழிக்கப்பட்டதாக சர்ச்சைகள் உருவானது.
இது போன்றவற்றில் இருந்து பாதுகாக்க ஜிமெயில் பாவனையாளரான நீங்களும் உங்கள் மின்னஞ்சல்களை இலவசமாக பேக்கப் செய்து கொள்ளலாம். அதற்கு ஹாட்மெயில் சேவைக்கு ஜிமெயிலில் இருக்கும் மின்னஞ்சல் அனைத்தையும் காப்பி செய்து கொள்வதற்கு உதவுகிறது ஒரு தளம்.
முதலில் ஹாட்மெயில் சேவை சிறந்த பாஸ்வேர்ட்டுடன் ஒரு மின்னஞ்சல் கணக்கை திறந்துவிடுங்கள். அதன்பின்னர் TrueSwitch என்ற தளத்திற்கு சென்று ஜிமெயிலின் யூசர் நேம் பாஸ்வேர்ட்டை தாருங்கள்.
பின்னர் ஹாட்மெயிலின் யூசர் நேம் பாஸ்வேர்ட்டை கொடுத்ததும் காத்திருக்க வேண்டியது தான் உங்கள் வேலை. 24 மணிநேரம் அல்லது இரு நாட்களின் பின்னர் அனைத்து மின்னஞ்சல்களும் ஹாட்மெயில் சேவைக்கு காப்பி செய்யப்பட்டதும் TrueSwitch தளம் மின்னஞ்சல் மூலமாக அறியத்தரும்.

புதிய வகையில் கண்டுபிடிக்கப்பட்ட சொற்களஞ்சியம்

பொதுவாக டிக் ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில், அதே மொழியில் விளக்கம் அளிக்கப்படும்.
அல்லது ஒரு மொழி சொல்லுக்கு இன்னொரு மொழி சொல் மற்றும் விளக்கம் அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் தமிழ் அகராதியில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தரப்பட்டு, இலக்கணக் குறிப்புகளுடன் விளக்கம் கிடைக்கும். இணையத்தில் இன்னொரு புதிய வகை டிக் ஷனரி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இது டிக்ட்ஸ் இன்போ (Dicts Info) என்று அழைக்கப்படுகிறது.
இதன் இணைய தளம் சென்றால், அங்கு எந்த சொல்லுக்கு பொருளும் இன்னொரு மொழிச் சொல்லும் வேண்டுமோ, அந்த சொல்லை அதற்கான கட்டத்தில் அமைக்க வேண்டும். பின்னர், எந்த எந்த மொழிகளில் உங்களுக்கு பொருள் வேண்டுமோ, அந்த மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, Computer என்ற ஆங்கிலச் சொல்லைக் கட்டத்தில் அமைத்து, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பொருள் வேண்டும் என இந்த இரண்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்து Search கட்டத்தில் கிளிக் செய்திட வேண்டும். உடன் Universal Dictionary என்ற தலைப்புடன் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பிரிவுகளில் சொற்களும் பொருளும் காட்டப்படும்.
எடுத்துக்காட்டாக, அளிக்கப்பட்ட Computer என்ற சொல்லுக்கு, ஆங்கிலத்தில் அதற்கான விளக்கமும், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதற்கு இணையான சொற்களும் தரப்படுகின்றன. இத்துடன் இந்த டிக் ஷனரி நின்று விடவில்லை. உடன், கொடுக்கப்பட்ட சொல் தொடர்பான மற்ற சொற்களும் தரப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, Computer என்ற சொல் தரப்பட்டபோது, Program, Calculator, Software, Computer Science என்ற சொற்களும், பொருளும் தரப்பட்டன.

உங்கள் பேஸ்புக் நண்பர்களை கூகுள் மேப்பில் காண வேண்டுமா?

பேஸ்புக் நண்பர்களின் ஜியோகிராபிக் லோக்கேஷனை கூகிள் மேப்பில் தெரியும் படி செய்வதற்கு உதவி செய்கிறது ஒரு தளம்.
உங்களது பேஸ்புக் கணக்கை WhereMyFriends என்ற இணையதளத்தில் இணைத்துக் கொண்டதும் கூகிள் மேப்பில் உங்கள் நண்பர்களின் இடங்களை காணலாம்.
குறிப்பாக இவ்வாறு உருவாக்கப்பட்ட மேப்பில் மாற்றங்கள் செய்ய முடியாது மற்றும் இந்த மேப்பை அனைவரும் பார்க்கலாம்.
இணையதள முகவரி

அரட்டை அடிப்பவர்களுக்கான இணையதளம்

அதிகம் பேசுபவர்களை விட்டு விடுங்கள், எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே கருத்து சொல்பவர்களையும் விட்டுத்தள்ளுங்கள்.
ஆனால் எந்த ஒரு பொருள் குறித்தும் மற்றவர்களின் கருத்தை அறிய முடிவது நல்ல விடயமே.
நண்பர்களோ, தெரிந்தவர்களோ அல்லது அறிமுகம் ஆகாதவர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் நாம் நினைப்பதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களை முன் வைப்பதோடு குறிப்பிட்ட அந்த பொருள் குறித்து நமக்கு தோன்றாத அல்லது நாம் நினைத்து பார்த்திராத கருத்துக்களை எல்லாம் அறிந்து கொள்ள முடியும்.
தான் பிடித்த முயலுக்கு மூனே கால் என்று இருப்பதை விட மாற்று கருத்துக்களை தெரிந்து கொள்வது பல விதங்களில் பயனுள்ளதே. பிறருடன் விவாதிப்பதை விட இதற்கு சிறந்த வழி வேறில்லை. விவாதங்கள் நல்லது. விவாதிக்க நானும் தயார் என்று நீங்கள் நினைத்தால் அதற்காக என்றே அழகான ஒரு இணையதளம் இருக்கிறது.
திஸ்.இஸ் என்னும் அந்த தளத்தில் எந்த தலைப்பு குறித்தும் சுலபமாக விவாதிக்கலாம். எந்த விஷயம் குறித்து நீங்கள் விவாதிக்க விரும்புகிறீர்களோ அதற்கான பக்கத்தை இந்த தளத்தில் உருவாக்கி கொண்டு உங்கள் மனதில் உள்ள கருத்தை தெரிவிக்கலாம்.
விவாதத்திற்கான பக்கத்தை அமைப்பது மிகவும் சுலபம். பெயரையும், இமெயில் முகவரியையும் பதிவு செய்து விட்டு விவாதத்துக்கான தலைப்பை குறிப்பிட்டு விவாதத்திற்கான கருத்தை குறிப்பிட்டால் போதுமானது.
அதன் பிறகு இணையவாசிகள் யார் வேண்டுமானாலும் அந்த கருத்தை வெட்டியோ ஆதாரித்தோ த‌ங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அதற்கு நீங்கள் பதில் தெரிவிக்கலாம். வேறு ஒருவர் அதற்கு தன் கருத்தை பதிவு செய்ய‌லாம். இப்படியாக தொடர் பரிமாற்றமாக கருத்துக்கள், மாற்று கருத்துக்கள் பதிவாகி கொண்டே இருக்கும்.
நாம் நினைத்தை மாற்றி கொள்ள வைக்காவிட்டாலும் மற்றவர்களின் கோணங்கள் மற்றும் பார்வைகள் புதிய புரிதலை ஏற்படுத்தக்கூடும். சில நேரங்கள் மாற்று கருத்துக்கள் நம்முடைய கருத்து மேலும் வலுப்படவும் உதவலாம். அந்த வகையில் இந்த தளம் ஒருவருடைய கருத்துக்களை பட்டை தீட்டிக்கொள்ளவும், புரிதலை அதிகமாக்கி கொள்ளவும் கை கொடுக்கும்.
இணையத்தின் ஆதார பண்பே விவாதத்திற்கு வழி வகுப்பது தான் என்னும் போது விவாதிப்பதற்காகவே ஒரு தளம் இருப்பது திறந்த மனம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதோடு இந்த தளத்தின் எளிமையான வடிவமைப்பு விவாதிப்பதை மேலும் சுலபமாக்குகிறது.
ஆனால் ஒன்று இந்த தளம் இப்போதைக்கு அறிமுக நிலையிலேயே இருக்கிறது. விவாதுப்பதற்கும் கருத்து சொல்லவும் ஆர்வம் கொண்ட ஆதரவாளர்கள் வட்டத்தை உருவாக்க முடிந்தாலே இந்த தளம் உண்மையில் பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கில் ஓன்லைனில் இருப்பதை மற்றவர்களிடமிருந்து மறைக்க

பேஸ்புக்கானது நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விடயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம்.
ஒரு சில நேரங்களில் ஏதோ ஒரு தேவைக்காக நாம் பேஸ்புக்கில் உலாவரும் போது மற்ற நண்பர்களிடம் இருந்து நாம் ஓன்லைனில் இருப்பதை மறைக்க கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
1. முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்ததும் உங்களின் அரட்டை(chat) பகுதியை ஓபன் செய்யுங்கள். இந்த பகுதி உங்கள் பேஸ்புக் விண்டோவின் கீழ்பகுதியில் வலது பக்கத்தில் இருக்கும்.
2. திறந்தவுடன் ஓன்லைனில் உள்ள உங்கள் நண்பர்களின் பெயர்கள் காணப்படும்.
3. அதில் மேல்பகுதியில் உள்ள விருப்பத்தேர்வுகள்(Options) என்பதை க்ளிக் செய்யுங்கள். உடனே ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
4. அந்த விண்டோவில் உள்ள ஓப்லைனுக்கு செல்ல(Go offline) என்பதை க்ளிக் செய்து விடவும். இப்பொழுது நீங்கள் அரட்டை பகுதியில் இருந்து முழுவதும் துண்டிக்கபடுவீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் ஓன்லைனில் இருப்பது தெரியாது.
5. இந்த வசதி மீண்டும் வேண்டுமென்றால் மறுபடியும் அரட்டை பகுதியின் மீது க்ளிக் செய்தாலே போதும் இவ்வசதியை பெற்று விடலாம்.

ஓன்லைனில் 20 ஜி.பி வரை தகவல்களை பறிமாறிக் கொள்ள

இணையத்தை பயன்படுத்தும் அனைவருமே நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக் கொள்வோம். அந்த வகையில் தகவல்களை ஓன்லைன் மூலமாக பறிமாறிக் கொள்ள பல்வேறு தளங்கள் உள்ளன.

அவை அனைத்தும் குறைந்த அளவுடைய கோப்புகளை மட்டுமே பறிமாறிக் கொள்ள அனுமதிக்கும். ஆனால் இந்த தளத்தின் மூலம் ஒரு நாளைக்கு 20 ஜி.பி வரை தகவல்களை பறிமாறிக் கொள்ள முடியும்.

ஆனால் ஒரு கோப்புடைய அளவானது 200 எம்.பி வரை மட்டுமே இருக்க வேண்டும். அதிக அளவுடைய தவல்களை பறிமாறிக் கொள்ள வேண்டுமெனில் நாம் ஏதாவது ஒரு மெமரி டிவைஸ் துணையுடன் மட்டுமே தகவல்களை பறிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு நம் அருகாமையில் உள்ள நண்பர்களிடம் தகவல்களை எளிமையாக பறிமாறிக் கொள்ள முடியும்.

ஆனால் வெளியூர்களில் பார்க்க முடியாத தூரத்தில் உள்ள நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ தகவல்களை பறிமாற்றம் செய்ய வேண்டுமெனில் அது இணையத்தின் உதவியுடன் மட்டுமே மிக விரைவாக முடியும்.

இந்த தளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கை தொடங்கி கொள்ளவும். பின் File Manager என்பதை கிளிக் செய்து புதியதாக Create Folder என்னும் பட்டியை அழுத்தி ஒரு போல்டரை உருவாக்கி கொள்ளவும். வேண்டுமெனில் பாஸ்வேர்ட் உருவாக்கி கொள்ள முடியும்.
பின் Upload என்னும் பட்டியை அழுத்தி வேண்டிய பைலை பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். நீங்கள் விரும்பினால் தளத்தில் இருந்தவாறே பல கோப்புகளை ஒருங்கிணைத்து Compress செய்து கொள்ள முடியும். இதற்கு கோப்புகளை தேர்வு செய்து கொண்டு More Actions என்னும் தேர்வு மெனுவை கிளிக் செய்து Compress File என்பதை கிளிக் செய்து சேமித்துக் கொள்ள முடியும்.

இந்த தளத்தில் நீங்கள் தகவல்களை சேமித்து வைப்பதுடன், நண்பர்களுக்கு இந்த கோப்புகளின் லிங்கினை அனுப்பி தகவலை பறிமாறிக் கொள்ள முடியும். இந்த தளத்தின் மற்றொரு வசதி என்னவெனில் MP3 பிளேயர் மற்றும் Flash பிளேயர் வசதி உள்ளது. இந்த வசதியின் மூலம் தளத்தில் இருந்தவாறே பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம்.

இணையதள முகவரி

எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் ஓன்லைனில் புகைப்படங்களை அழகுபடுத்த

நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை அழகாக Cut செய்து கொள்ளும் விருப்பம் நம் அனைவரிடமும் இருக்கும்.
இதற்காக Photoshop போன்ற எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் சில நிமிடங்களில் புகைப்படங்களை அழகாக Cut செய்யலாம். வேகமான சுழ்நிலையில் புதிதாக ஒரு மென்பொருளை படிப்பதற்கு பெரும்பாலும் நேரம் கிடைப்பதில்லை.
புகைப்படங்களை சிலர் போட்டோஷாப் போன்ற மென்பொருள் கொண்டு அழகாக வடிவமைத்து வைத்திருப்பார்கள். அவர்களை விட நம்மால் நம் புகைப்படங்களை அழகாக Cut செய்து நம் டிவிட்டர் முதல் பேஸ்புக் வரை அனைத்திலும் வைக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இந்தத்தளத்திற்கு சென்று Choose என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் Cut செய்ய வேண்டிய புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Go என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும் திரையில் நம் புகைப்படத்தில் எந்த பகுதிவரை வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
அடுத்து Round the Corners என்பதில் எந்த Style-ல் cut செய்ய வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு நிழல் வேண்டும் என்றால் Drop Shadow என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்துக்கொண்டு Preview என்ற பொத்தானை அழுத்தி Output படத்தின் Preview பார்த்துக்கொள்ளலாம்.
எல்லாம் சரியாக தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்ததும் Done என்ற பொத்தானை சொடுக்கி படத்தை நம் கணினியில் சேமித்துக்கொள்ளவும்.
இணையதள முகவரி

எதையும் விரைவாக செய்ய வழிகாட்டும் இணையம்

எதையும் விரைவாக செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள். அதாவது தற்போது செய்து கொண்டிருக்கும் செயலை மிகவும் விரைவில் முடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்காக ஒரு இணையதளம் இருக்கிறது. தி பாஸ்டஸ்ட் வே சைட் என்னும் அந்த தளம் ஒவ்வொரு செய‌ல்களையும் விரைவாக செய்வது எப்படி என வழி காட்டுகிறது.
வழிமுறைகளோடு வீடியோ விளக்கமும் இடம்பெறுகிறது. இரண்டே நிமிடங்களில் டி ஷர்ட்டை மடிப்பது எப்படி என பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.
எல்லாமே பயனுள்ளவை என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரஸ்யமான தளம். ஏதாவ‌து செயல்க‌ளை விரைந்து முடிக்க‌ வ‌ழி தேவை என்றாலும் இந்த‌ த‌ள‌த்தில் ச‌ந்தேக‌ம் கேட்க‌லாம்.
இணையதள முகவரி

கூகுளுக்கு போட்டியாக போர்லுக்

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்களில் ஒரே நேரத்தில் மற்றும் ஒரே இடத்தில் தேட உதவும் தேடியந்திரம் இது.
இத்தகைய தேடியந்திரங்களுக்கும் குறைவில்லை தான். இருப்பினும் போர்லுக் கூகுலை போலவே எளிமையாக இருக்கிறது. இதை விடை சுலபமாக பல தேடியந்திர தேடலை பயன்படுத்த முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிக மிக எளிதாக தேடல் சேவையை வழங்குகிறது போர்லுக்.
சொல்லப்போனால் இதன் முகப்பு பக்கம் கூகுலை விட எளிமையாக இருக்கிறது.ஒரே ஒரு தேடல் கட்டம். அதன் இடது பக்கத்தில் போர்லுக் என்னும் பெயர் அவ்வளவு தான். வேறு எந்த அம்சங்களும் கிடையாது.
ஆனால் தேடல் கட்டத்தில் டைப் செய்த பிறகு தான் சின்னதாக அற்புதம் அரங்கேறுகிறது. உண்மையில் டைப் செய்யும் போதே அற்புதம் ஆரம்பமாகி விடுகிறது. முதல் எழுத்தை அடிக்க துவங்கியதுமே தேடப்படும் சொல் இதுவாக தான் இருக்கும் என்ற கணிப்பில் அந்த சொல்லுக்கு உரிய தேடல் முடிவுகள் அணிவகுக்கின்றன. பொருந்தக்கூடிய பிற சொற்களும் கொடுக்கப்படுகின்றன.
அந்த கணிப்பு சரியானது என்றால் தேடல் முடிவுகளை பரிசிலிக்க துவங்கி விடலாம். இல்லை என்றால் நாம் தேட உத்தேசித்த சொல்லை முழுவதும் அடித்து தேடலாம். முதலில் வரும் தேடல் முடிவுகளில் திருப்தி அடைய வேண்டும் என்றில்லை. கூகுலின் போட்டி தேடியந்திரமான பிங் மற்றும் யூடியூப், டெலிசியஸ், பேஸ்புக், டிவிட்டர், பிலிக்கர் போன்ற சேவைகளையும் பயன்படுத்தி தேடிப்பார்க்கலாம்.
இந்த சேவை ஒன்றும் புதிதல்ல கூகுல் இத்தகைய உடனடி சேவையை வழங்கி வருகிறது. ஆனால் அதனை மிக அழகாக இந்த தேடியந்திரம் தருகிறது. தேடல் முடிவு பட்டியலின் இடது பக்கத்தில் முதலில் கூகுலும் அதனை தொடர்ந்து மற்ற சேவைகளும் வரிசையாக இடம்பெறுகின்றன.
ஐடியூன்ஸ் மூலம் பாடல்களையும் மேப்ஸ் மூலம் வரைபடங்களையும் தனியே தேடலாம். நாடுகளுக்கான தனித்தனி பட்டியலும் இடம்பெறுகின்றன. செய்திகள், புகைப்படங்கள், வீடியோ என தனித்தனியே தேடிக்கொள்ளும் வசதியை தரும். தேடியந்திரங்கள் எல்லாவற்றையும் விட அதிக சிக்கல் இல்லாமல் குறுக்கீடுகள் இல்லாமல் இந்த சேவை மிகவும் எளிமையாக இருக்கிறது.
அந்த வகையில் மிகச்சிறந்த உடனடி தேடியந்திர சேவை என்று இதனை வர்ணிக்கலாம். கூகுலை தவிர வேறு எந்த தேடியந்திரத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பவர்கள் கூட இதனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கலாம். எப்படியும் இந்த தேடியந்திரம் முதலில் முன் வைப்பது கூகுல் தரும் முடிவுகளை தான்.
இணையதள முகவரி

பேஸ்புக் நிறுவனரின் கணக்கு களவு போன பரிதாபம்!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் விசிறிகள் பக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹேக்கர்கள் களவாடப்பட்டுள்ளது.
ஹேக் செய்தவர்கள் அதில் ஒரு செய்தியை போட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்தியைப் படித்து விட்டு 1,800 பேர் விருப்பமும் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது. பேஸ்புக்கில் புகுந்து ஹேக் செய்வது சகஜமாகி வருகிறது. ஏராளமான பிரபலங்களின் பக்கங்கள்தான் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றன. சமீபத்தில் கூட பிரான்ஸ் அதிபர் சார்கோசியின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தனர். அதில் சார்கோசி மறு தேர்தலை விரும்பவில்லை என்று எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்து, பேஸ் புக்குக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

இணையதளத்தின் IP முகவரியை கண்டறிய...

எந்தவொரு இணையதளத்தின் IP முகவரியையும் பின்வரும் முறையை பயன்படுத்தி கண்டறியலாம்.



உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமா?

பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?
அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?
இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள்.
பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.
மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.
மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும், மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ்  இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.

கூகுள் குரோமை விடவும் மிகச் சிறந்த இலவச பிரவுசர்

Google chrome மற்றும் Internet Explorer யை விட சிறந்த, வேகமான இணைய உலாவி ஒன்று உள்ளது... என்னவாக இருக்கும் என பார்கிரீர்களா? அதன் பெயர்தான் Maxthon 3.0
Maxthon இன் சிறப்பியல்புகள்:
1. Maxthon இல் இரட்டை படத்திரை பொறி (dual display engines) எனப்படும் Ultra Mode மற்றும் Retro Mode என்பவைகளை கொண்டது.
2. Auto -completes நினைவகத்தை கொண்ட  Smart address bar உள்ளடக்கப்பட்டுள்ளது.
3.  Magic Fill Manager எனப்படும் நாம் அடிக்கடி செல்லும் websites களுக்கான கடவுச்சொற்களை save செய்து கொள்ளமுடியும்.
4. Popup ads மற்றும்  சில தேவையற்ற windows ளை Maxthon 3.0 மூலம் நிறுத்தி வைக்க முடியும். மேலும் Ad Hunter எனும் சேவையும் அதாவது எந்த தளங்களின் ads எதிர்காலங்களில் காட்டவேண்டுமோ அவற்றை சேமித்து வைத்துகொள்ளலாம்.
5. Mouse Gesture எனப்படும் புதிய வசதியானது, நீங்கள் திறந்துள்ள தளத்தை refresh செய்ய வேண்டுமானால் எதுவித refresh பட்டன் அல்லது shortcut படடன்களை பாவிக்காமலே Mouse​ஐ right click செய்து L வடிவில் வரைந்து விட்டால் மிக விரைவாக refresh ஆகிவிடும்.
6. இதன் இன்னுமொரு சிறப்பியல்பு Online Notepad, Feed Reader, Safe mode(which detects safe sites), Page mute என ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது.
7. அடுத்ததாக Drag and Drop Search எனும் வசதி, உலாவியில் உள்ள எந்தவொரு சொற்கள் அல்லது வசனங்களை தெரிவுசெய்து நகர்த்தி Search box யில் விட்டால் ஒரு சில நொடிகளிலேயே முடிவுளை Search செய்துவிடும்.
8. உலாவியிலுள்ளவற்றை இலகுவாக பிரின்ட் மற்றும் சேவ் (print and save) செய்துகொள்ள Snap Button ஒன்று தரப்பட்டுள்ளது, மேலும் Redo Page, Home, Recently viewed pages, back மற்றய பொத்தான்கள் இவ்உலாவிக்கு அழகை தருகின்றன.
9. Maxthon 3.0ஆனது இலவச user accountகளை வழங்குவது மட்டுமல்லாது credits மற்றும் bonusகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குகின்றது, இவற்றை வெவ்வேறான தேவைகளுக்கு பயன்படுத்த கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
10. மேலும் Opera மற்றும் Chrome களில் போன்று உங்கள் விருப்ப தளங்ளை save செய்து கொள்ளவும் Speed Dial வசதிகளையும் கொண்டுள்ளதுடன் Tab வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
11. இதன் தோற்றத்தை skins மாற்றிகொள்ள add-ons  வசதியையும் தருகிறது, இதை பெற்றுக்கொள்ள http://addonsmx.maxthon.cn முடியும்.
இதை விடவும் மேலும் பல வசதிளையும் Maxthon கொண்டுள்ளது.
தரவிறக்க சுட்டி
பேஸ்புக் முகவரியை மாற்ற வேண்டுமா?
நம்மில் பெரும்பாலனவர்கள் பேஸ்புக் எண்ணும் சமூக வலை தளத்தில் உறுப்பினர்களாக உள்ளோம்.

நாம் பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது ஏதோ ஆர்வக் கோளாறில் ஒரு பெயரை கொடுத்து பதிந்து விட்டு இருப்போம். ஆனால் தற்போது நீங்கள் அந்த பேஸ்புக் முகவரியை மாற்ற நினைத்தால் உங்களுக்கான பதிவு தான் இது. முகவரியை மாற்ற
1. முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
2. இப்பொழுது கணக்கு(Settings) பகுதியில் உள்ள கணக்கு அமைப்புகள் (Account Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3. செய்தவுடன் கீழே கொடுக்கப்பட்டதை போன்று விண்டோ தோன்றும்.

4. அதில் உள்ள பயனர் பெயர் என்ற பகுதியில் உள்ள மாற்று என்ற லிங்க்கை க்ளிக் செய்து உங்கள் புதிய பெயரை கொடுத்து கிடைக்கிறதா என்று சோதிக்கவும். கவனம் இருக்கட்டும் இதை நீங்கள் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். ஆகவே யோசித்து சரியான பெயரை கொடுத்து எழுத்துக்களை சரிபார்க்கவும்.
5. உங்கள் புதிய பெயர் கிடைத்தவுடன் உங்களுக்கு ஒரு செய்தி வரும் அதில் உள்ள உறுதிபடுத்தவும் என்பதை க்ளிக் செய்த உடன் உங்களின் பேஸ்புக் முகவரி மாறிவிடும்.
இப்பொழுது உங்களின் புதிய முகவரியை கொடுத்து பேஸ்புக்கில் இணைந்து கொள்ளலாம்.

கூகுள் உதவியுடன் இணையதளங்கள் அனைத்தையும் மொபைலில் பார்க்க

கூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் பார்க்கலாம்.
எதையும் எளிமையாகவும் திறம்பட செய்வதிலும் நாங்கள் தான் வல்லவர்கள் என்று மறுபடியும் ஒரு முறை நம் அனைவரையும் சொல்ல வைத்திருக்கிறது கூகிள். புதிதாக இணையதளங்கள்
உருவாக்குபவர்கள் கணனியில் தங்கள் தளம் தெரிவதற்கும், மொபைலில் தெரிவதற்கும் தனித்தனியாக தான் உருவாக்கி கொண்டு இருக்கின்றனர்.
பல நிறுவனங்களும் இதற்கு போட்டியாக உங்கள் இணையதங்களை மொபைலில் பார்க்க சரியாக தெரியும்படி உருவாக்கி கொடுக்கிறோம் என்று சொல்லி கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப்பிரச்சினையை வித்தியாசமான கோணத்தில் கூகுள் கையாண்டுள்ளது. ஆம் உங்கள் தளங்களை மட்டும் கொடுங்கள். நாங்களே அதை மொபைலுக்கு தக்கபடி காட்டுகிறோம். யாரும் செய்யாத ஒரு புது முயற்சி தானே.
சில தளங்கள் நாங்களும் மொபைலில் தெரியவைக்கிறோம் என்று சொல்லி நமக்கே நம் தளத்தை பார்க்க விருப்பம் இல்லாத அளவிற்கு எழுத்தைப் பிச்சி வீசி விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கூகுள் தற்போது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி இருக்கும்.
இந்தத்தளத்தில் சென்று நம் தளம் அல்லது நாம் பார்க்க விரும்பும் எந்ததளத்தையும் அதன் முகவரி கொடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கி நம் மொபைலில் அழகாக பார்க்கலாம், படம் வேண்டாம் என்றால் Hide images என்ற கட்டத்தை சொடுக்கிவிட்டு எழுத்தை மட்டும் பார்க்கலாம்.
இணையதள முகவரி

எச்சரிக்கை: பேஸ்புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்

நீங்கள் வலையில் இருந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எவ்வாறு இருக்கும்.
பேஸ்புக்கில் இருந்து இதுவரை 250,000 உறுப்பினர்களின் விவரங்களை டேட்டிங் தளங்கள் திருடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது. லவ்லி பேசஸ் என்னும் இணையதளம் சமீபத்தில் வெளியானது. இதில் இப்படியாக பேஸ்புக் பக்கங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோரின் விவரங்களைத் திருடி வெளியிட்டு இருந்தனர்.
இதனை பேஸ்புக் நிறுவனத்தால் தடுக்கவே முடியாது என்பது இன்னொரு வேடிக்கையான விடயமாகும். "உறுப்பினர்களின் விவரங்களைத் திருடுவது எமதுக் கொள்கைகளின் மீறலாலும்" என பேஸ்புக்கின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான பேரி சச்னிட் கூறினார். இவ்வாறு அத்துமீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இருந்தாலும் இப்படி இணையத்தில் இருந்து உறுப்பினர்களின் விவரங்களை சுடுபவர்களை முற்றாக ஒன்றும் செய்ய முடியாத நிலையே உண்மையாக இருக்கிறது. காரணம் இவ்விவரங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் பொது உடைமையாக இருப்பதே.
பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களும் அல்லது உங்களது வயதுநிரம்பாத பிள்ளைகள் கணக்கு வைத்திருந்தாலும், கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. பின்னாளில் வரன் தேடும் தளங்களில் மட்டுமில்லாமல் டேட்டிங் தளங்களிலும் உங்கள் புகைப்படங்கள் வரலாம்.

காதலர்களுக்கான ஒரு இணையதளம்







ஒரு இணையதளத்தின் வெற்றிக்கு அதன் பெயருக்கும் முக்கிய பங்கு உண்டு. எனவே தான் இணைய உலகில் வெற்றி பெற நினைப்பவர்கள் முதலில் அசத்தலான பெயரை தேட முற்படுகின்றனர்.இதற்கு நேர்மாறாக அதிகம் யோசிக்காமல், இணையதளத்தின் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் பெயரை அப்படியே நீளமாக வைத்து விடுபவர்களும் இருக்கின்றனர். மேக் யுவர் கேர்ல் பிரண்ட் ஹாப்பி இணையதளம் இந்த ரகத்தை சேர்ந்தது தான். நீளமான இணைய பெயர் பாதகமானது என்னும் கருத்திற்கு மாறாக பெயரை சொன்னவுடனே கவனத்தை கவரும் வகையில் இந்த தளத்தின் பெயர் அமைந்துள்ளது.
அதற்கு காரணம் இதன் உள்ளடக்கம் தான். காதலியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வழி காட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் அதனையே தலைப்பாக சூடிக்கொண்டுவிட்டது. ஒரு மேம்பட்ட காதலனாக இருங்கள் என்று கூறும் இந்த தளம் அதற்கான வழியாக காதலியின் பிறந்த நாளை மறக்காமல் இருந்து வாழ்த்து சொல்வது போன்ற அம்சங்களை வலியுறுத்துகிறது.
காதலி தொடர்பான முக்கிய தினங்களை நினைவூட்டுவது, காதலி அகமகிழ்ந்து போகக்கூடிய பரிசு பொருள் வாங்கித்தர உதவுவது, தேவைப்பட்டால் காதல் ஆலோசனைகளை தருவது போன்ற சேவைகளை வழங்குகிறது. காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது பொருத்தமானதே.
சொந்த உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டு பின்னர் மற்ற காதலர்களுக்கும் உதவும் என்பதால் இந்த தளம் அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லா தகவல்களுமே நடைமுறை சாத்தியம் கொண்டதாக, சுவையானதாக இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் ஆலோசனைகளும் வழிகளும் உருவாக்கப்பட்டுள்ளனவாம். காதலியை கவர்வதற்கான ஆலோசனைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
காதலன்களுக்கான ஆலோசனை மட்டும் தானா? காதலிகளுக்கு எதுவும் இல்லையா என்று கேட்கலாம். கவலையே வேண்டாம் பெண்களுக்கு என்று தனிப்பகுதி உள்ளது. காதலர்களுக்கு உதவுங்கள் என்று அழைக்கும் அந்த பகுதி காதலிகள் தங்கள் எதிர்பார்ப்பையும், மனதையும் தெரிவிக்க வழி செய்கிறது. ஆனால் காதலன்களை கவர்வதற்கான வழிகள் இல்லை.
இணையதள முகவரி

புதிய மாற்றங்களுடன் பேஸ்புக்

பேஸ்புக் இணைய தளத்தின் மிகச் சிறந்த சேவைகளில் ஒன்றான பேஸ்புக் பேஜ்(facebook page) தற்போது புதிய வடிவில் வெளிவந்துள்ளது.
கடந்த மாதம் மாற்றப்பட்ட பேஸ்புக் ப்ரொபைலினை(profile) போன்றே இந்த புதிய Page காணப்படுகின்றது. இந்த மாற்றங்களானது இரண்டு தோற்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்பக்கத்தில் காணப்படும் போட்டக்களினை(photo) குறிப்பிடலாம். இது முக்கிய விடயங்களினை உள்ளடக்கியுள்ளது.
பேஸ்புக் பேஜினை கொண்டு லாகின்(Login) செய்யும் வசதி. இது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வசதியாகும். இனி உங்கள் பேஸ்புக் பேஜினைக் கொண்டு Login செய்து முழு இணைய தளத்தினையும் வலம் வர முடியும்.
அவ்வாறு லாகின் செய்து பெறப்படும் Home நிரலில் உங்கள் பேஜ் சார்பிலான News feed ம், Profile நிரலில் குறித்த பேஜும் நோடிபிகேசன் பகுதியில் குறித்த பேஜிற்கான அறிவுறுத்தல்களும் காணப்படுகின்றது.
இவ்வாறு உங்கள் பேஜினை பயன்படுத்தி Login செய்ய Use facebook as page என்பதை க்ளிக் செய்தால் போதும். இந்த புதிய வசதிகளைப் பெற இங்கு க்ளிக் செய்து Upgrade என்பதை தெரிவு செய்யவும்.

ஒரே நேரத்தில் 20 லட்சம் ஒலிகளை கேட்டு மகிழ

உலகில் பல வகையான ஒலிகள் உள்ளன. இவை அனைத்தையும் நாம் கேட்பதில்லை. இந்த இயந்திர உலகில் இவற்றை தேடி கேட்டு இரசிக்கவும் நமக்கு நேரம் இல்லை.
எனினும் பல இலட்சக்கணக்கான ஒலிகளை ஒரே இடத்தில் அடக்கி வைத்துள்ள இணையதளம் ஒன்று உள்ளது. இத்தளத்தில் அவற்றை கேட்டு இரசிக்க முடிவதுடன் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
இயற்கையின் ஒலிகளை உங்கள் காதுகளுக்கு எட்டச்செய்யும் இத்தளம் மூலம் உங்களுக்குத் தேவையான ஒலி வடிவத்தினை தேடிப்பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.
சுமார் 20 இலட்சம் வித்தியாசமான ஒலிகள் இத்தளத்தில் உள்ளன. எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டில் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
இணையதள முகவரி

பேஸ்புக் மூலம் சிகிச்சை அளித்த மருத்துவர்

பேஸ்புக் பிரிந்தவர்களை சேர்த்து வைத்திருக்கிறது. சேர்ந்திருப்பவர்களை விவாகரத்து பெறவும் செய்கிறது. சில நேரங்களில் உயிர் காக்கவும் உதவியிருக்கிறது.
அந்த வகையில் இப்போது பேஸ்புக் பிரிட்டன் வாலிபர் ஒருவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெற உதவி செய்து அவருடைய உயிரை காப்பாற்றி இருக்கிறது. பீட்டர் பால் என்னும் அந்த வாலிபரே கூட இப்படி பேஸ்புக் தனது உயிரை காக்க கை கொடுக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலே தான் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வயிற்று வலி பற்றி குறிப்பிட்டு கொண்டிருந்தார். பேஸ்புக் பயனாளிகள் தங்கள் மன உணர்வுகளையும் நடவடிக்கைகளையும் இப்படி செய்திகளாக பகிர்ந்து கொள்வது வழக்கம்.
சிலர் தாங்கள் பார்த்த புதிய படங்களை பற்றி கூறலாம். சிலர் காலை செய்தி பற்றிய கருத்துக்களை தெரிவிக்கலாம். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் எதனையும் பேஸ்புக்கில் தெரிவிக்கலாம். பீட்டரும் இப்படி தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
பீட்டரின் நல்ல நேரம் அவரது பழைய நண்பர் ஒருவர் தற்போது மருத்துவராக இருப்பவர் இந்த செய்தியை படித்து பார்த்தார். மற்றவர்களுக்கு பீட்டர் ஏதோ புலம்புகிறார் என்று தோன்றியிருக்கலாம். ஆனால் மருத்துவரான ராகுல் வெலிநேனி இந்த குறிப்பை பார்த்துமே இவை அபன்டிசைட்ஸ் பாதிப்பாக இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டார்.
எனவே உடனடியாக பீட்டரின் பேஸ்புக் செய்திக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு செய்தியை அனுப்பி வைத்து உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் எழுதியிருந்தார். இருவரும் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் பீட்டரின் தொலைபேசி எண்ணோ, முகவரியோ மருத்துவரிடம் இல்லை. எனவே தனது மருத்துவமனையை குறிப்பிட்டு உடனடியாக தொடர்பு கொள்ளவும் என்று தெரிவித்திருந்தார்.
பீட்டர் வேறு ஒரு பகுதியில் இருந்ததால் உடனடியாக அந்த மருத்துவமனிக்கு செல்லும் சாத்தியம் இருக்கவில்லை. இருப்பினும் மருத்துவ நண்பரின் எச்சரிக்கையின் தன்மையை புரிந்து கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை கேட்டிருக்கிறார். அங்கே பீட்டரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அபண்டிசைட்ஸ் நோயல் பாதிக்கப்படிருப்பதை கண்டு கொண்டு உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
அறுவை சிகிச்சை முடிந்து பீட்டர் கண்விழித்ததும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்போது தான் பேஸ்புக் மூலம் உயிர் காத்த நண்பா என நெகிழ்ந்து போனார்.
டாக்டர் ராகுலோ தன் பங்கிற்கு பிரிந்த பழைய நண்பரை மீண்டும் சந்திக்க இது சுவாரஸ்யமான வழி தான் என்று கூறியுள்ளார். சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கால் சாத்தியமாக கூடிய மாயங்களில் இதுவும் ஒன்று.

அனோமதேய திருடர்களிடமிருந்து தப்பித்து கொள்ள

இணையம்,கணணி என்பவற்றின் உச்ச பயன்களை அனுபவிக்கும் நமது தனிப்பட்ட ரகசிய தகவல்களை கொள்ளையிடும் நோக்கில் கொள்ளையர்கள் நமது கணணிகளை குறிவைத்து Vvirus,Trojan,Worms,Spyware,Adware போன்ற எண்ணிலடங்கா ஆபத்தான மென் பொருள்களை ஏவி விடுகின்றனர்.
இவை நமது கணனியில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உட்கார்ந்து கொண்டு தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை கன கச்சிதமாக செய்ய வல்லன. ஆனால் இவற்றை அழிக்கவல்ல குறிப்பிட்ட விலைக்கு கிடைக்கும் Kaspersky ,Norton போன்றவற்றை நாம் இன்ஸ்டால் பண்ணி கொண்டால் நிம்மதியாக இருக்கலாம்.
சிலவேளைகளில் பணம் கொடுத்து வாங்கி எல்லாம் போட முடியாது பண்ணுறதை பண்ணிட்டு போங்கையா என இருப்பவர்களுக்கு என நல்ல நோக்கில் இலவசமாக அண்டி வைரஸ்கள் வருகின்றன. கவலை என்ன வென்றால் இப்படியானவர்களை குறிவைத்து இலவச அண்டி வைரஸ் எனும் பெயரில் வைரஸ் களை தான் அனுப்புராங்கையா. உதாரணமாக சில இணையதளங்களில் இருக்கும் "இலவச ஸ்கானிங்" என இருக்கும். எல்லாமே வைரஸ் தான்.
நம்பகத் தன்மையுள்ள அதிசக்தி வாய்ந்த பிரபல பத்து இலவச அண்டி வைரஸ் மென்பொருட்களை பார்ப்போம். செயற்திறனில் கட்டணத்துக்கு கிடைக்கும் அண்டி வைரஸ்களுக்கு நிகராக ஒப்பிட முடியாவிட்டாலும் சிறந்த முறையில் பாதுகாப்பினை வழங்க வல்லன.
1 .AVG Anti-Virus Free Edition 2011
இலவசமாக தரவிறக்கக்கூடிய AVG ஆனது Virus ,Spyware என்பவற்றில் இருந்து windows இனை பாதுகாப்பதோடு இதன் AVG Social Networking Protection சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பு வழங்கும்.
2 .Avast Free Anti virus
இது கணனிக்கு இருக்கவேண்டிய ஆககுறைந்தத பாதுகாப்பினை வழங்கு வதோடு Virus ,Spy ware என்பவற்றுக்கெதிராக சிறந்த முறையில் செயற்பட வல்லது. 100 % இலவச திறன் கூடியதுமாகும்.
3 .Avira AntiVir Personal – Free Anti virus
இது உங்கள் கணணியை மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல viruses, worms, Trojans and costly dialers என்பவற்றில் இருந்தது பாதுகாக்க வல்ல ஒரு இலவச மென்பொருள் ஆகும்.
4 .Malwarebytes Anti-Malware
Malware இக்கு எதிரான இது எவ்வளவு தான் பெரிய malware ,spyware என்றாலும் அடியோடு அழித்து விடும். விரைவானதும் திறன் மிக்கதுமான இது கணனிக்கு நல்ல காவலன்.
5 .Ad-Aware Free Internet Security
இந்த கணணி பாதுகாப்பு மென்பொருள் real-time protection, advanced Genocode detection technology, rootkit protection, automatic updates, என பல சிறப்பியல்புகளை கொண்டுள்ள பயன் மிக்க ஒன்று.
6 .CCleaner
விண்டோஸ் பக் இல் உள்ள வைரஸ் போன்றவற்றை துப்பரவு செய்து வேகம் உள்ள கணணியாக பேணுவதுடன் உங்கள் தனிபட்ட கோப்பு திருட்டுக்களிருந்தும் பாதுகாக்கிறது.
7 .Spybot – Search & Destroy
இது உங்கள் கணனியில் உள்ள spyware இனை தேடி அழிக்க வல்ல ஒரு பாதுகாப்பு மென்பொருள்.இலவசமான Spybot – Search & Destroy உம ஒரளவு நம்பகத்தன்மை உள்ளது.
8 .Hotspot Shield
இது நீங்கள் இணையத்தில் செய்யும் கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பாக செய்ய உதவுகிறது. குறிப்பாக நீங்கள் விரும்பினால் அநோமதயராக வலம வரவும் உதவுகிறது.
9 .PC Tools AntiVirus Free
இது சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து ரகசிய தகவல்களின் பாதுகாப்பு , அன்னியர்கள் ரகசியமாக கணனியில் ஊடுருவுதல் முறியடித்தல் என்பவற்றை உறுதி செய்கிறது.
10 .Spyware Blaster
இது கணணியை பாதுகாப்பதோடு இணையத்தின் நல்ல பக்கத்தினை மட்டுமே நாம் பார்க்க உதவுகிறது.அதாவது கசப்பான அனுபவங்களை தரவல்லவற்றை அழித்து விடும்.

Google Earth 6.. துல்லியமான 3D வசதியுடன்

கூகிள் நிறுவனத்தின் அற்புதத்தில் ஒன்றான Google Earth ன் புதிய பதிப்பான Google Earth 6 இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய பதிப்பின் மூலம் உலகத்தை இன்னும் உண்மையாக காணக்கூடியதாக உள்ளது.
இந்த புதிய பதிப்பில் முப்பரிமாண மரங்கள், உடன் இணைக்கப்பட்ட ஸ்ட்ரீட் விவ் மற்றும் மெருகூட்டப்பட்ட வரலாற்றுரீதியனா படங்கள் என பல்வேறு வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக கூகிள் கூறுகிறது.
முப்பரிமாண மரங்கள்
இந்த புதிய கூகிள் ஏர்த் பதிப்பின் மூலம் மிகத்துல்லியமான முப்பரிமாண படங்களை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக பூமியில் காணப்படும் மரங்கள் கூட மூன்று பரிமாணத்தில் காட்சியளிக்கிறது. இதன் மூலம் நிஜமான சுற்றுலா அனுபவத்தை கூகிள் ஏர்த் மூலம் பெறலாம் என கூகிள் உறுதியளிக்கிறது.

உடன் இணைக்கப்பட்ட Street view 
கூகிள் வழங்கிக் கொண்டிருக்கும் Street view சேவையானது இப்போது கூகிள் ஏர்த்துடன் ஒன்றினைக்கப்பட்டு வெளி வந்துள்ளது. இனி கூகிள் ஏர்த்தில் இருந்தவாறே பிரபல நகரங்களின் தெருக்களுக்கு சென்றுவரலாம்.
வரலாற்று புகைப்படங்கள்
கூகிள் ஏர்த்தின் முன்னைய பதிப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த வரலாற்று ரீதியான படங்களின் தொகுப்பினை இன்னும் இலகுவாக இந்த புதிய பதிப்பில் காணக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு வரலாற்று புகழ்மிக்க இடத்தினை அடையும் போது அந்த இடம் தொடர்பான வரலாற்று ரீதிய படங்களினை தோற்றுவிக்கும் வசதியே இது.
இவ்வாறு பல வசதிகளை கூகிள் ஏர்த் 6 கொண்டுவந்துள்ளது. நான் கூறியது தெளிவில்லையாயின் இந்த வீடியோவினை பார்த்து தெளிவடைந்து கொள்ளுங்கள்.

புது வசதிகளுடன் மாற்றங்களுடன் பேஸ்புக்

சமூக வலைப்பின்னல் உலகில் தினம் தினம் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்திவரும் பேஸ்புக் தற்போது புரொபைல் பேஜ் வடிவத்தினை மாற்றியமைத்துள்ளதுடன், வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நமது புதிய பேஸ்புக் புரோஃபைல் பேஜ் வடிவமைப்பானது படிப்படியாகவே மாற்றப்பட்டு வருகின்றது. எனினும் நீங்கள் விரும்பினால் இந்த வசதியினை உடனடியாக பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இதனை உடனடியாக பரிசோதிக்க விரும்பின்,

A ) இம் முகவரியில் சென்று உங்கள் கணக்கினுள் நுழையவும்.
B) பின்னர் வலது பக்க மேல் மூலையில் தரப்பட்டுள்ள ' You have the new profile' என்று குறிப்பிடப்பட்டுள்ள பச்சை நிற பட்டனை அழுத்தவும்.
c) இப்போது உங்கள் புரோஃபைல் மாற்றமடைந்திருக்கும்.
தற்போது புதிய வடிவில் தரப்பட்டுள்ள வசதிகள் மற்றும் மாற்றங்கள் பற்றி பார்வையிடுவோம்.
1) முதலாவதாக உங்களைப் பற்றியதொரு சிறிய அறிமுகம் தரப்படும் நீங்கள் எங்கு கல்வி கற்றீர்கள், பிறந்த திகதி, எங்கு வளர்ந்தீர்கள்? தற்போது என்ன செய்கிறீர்கள் என்பது தொடர்பிலானது இந்த அறிமுகம்.
அதற்குக் கீழ் அண்மையில் டெக் செய்யப்பட்ட புகைப்படங்கள் எனினும் இவ்விடயத்தில் உங்கள் 'பிரைவசி' தொடர்பான எல்லைகள் மீறப்படவில்லை காரணம் நீங்கள் அனுமதியளித்தவர்கள் மட்டுமே இப்புகைப்படங்களைப் பார்வையிட முடியும்.
2) மிக இலகுவாக மற்றைய வோல், இன்போ, போடோஸ் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வசதி.
3) தற்போது உங்கள் தொழில் மற்றும் கல்வி என்பன பற்றி அதிகமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும். மேலும் உங்களுடன் இருந்த நண்பர்களை உள்ளடக்க முடிவதுடன் - உங்கள் அனுபவங்கள், திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட முடியும்.
4) உங்களுக்கு பிடித்தமான இசை, வீடியோ, விளையாட்டு, விருப்பங்கள் ஆகியவற்றை 'விஷுவல்' வடிவில் காணமுடியும்.
5) இவற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதுதான் நண்பர்களை அவர்களூடான உங்களின் தொடர்புக்கு ஏற்ப பிரித்துக் கொள்வதாகும். கீழ் காட்டியவாறு அவர்களைப் பிரித்து பட்டியலிட்டுக் கொள்ள முடியும். உறவினர்கள், சிறந்த நண்பர்கள், சக ஊழியர்கள், பாடசாலை நண்பர்கள் போன்றோர் அடிப்படையில் இதனைப் பிரித்துக் கொள்ள முடியும்.

ஆன்லைன் ஷாப்பிங் - சில எச்சரிக்கைகள்!

விடுமுறை காலம் நெருங்குகிறது. புத்தாண்டு தொடங்க இருக்கிறது. பொங்கல் வர இருக்கிறது. மக்கள் தங்கள் மனங்கவர்ந்த, இதுவரை திட்டமிட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்.
இந்த முறை, பெரும்பாலானவர்கள் பொருட்கள் வாங்கிட, இணையத்தின் துணயை நிச்சயம் நாடுவார்கள். இருப்பினும் இதில் நிறைய தில்லுமுல்லுகளும், திருட்டுகளும் அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சற்று எச்சரிக்கையாக இதனை மேற்கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பார்ப்போம்.
1. நம்பிக்கையான கடைகளின் இணைய தளங்கள் வழியே மட்டும் வாங்கவும். இவை தங்களின் முகவரிகளையும், தொலைபேசி எண்களையும் தந்திருப்பார்கள். அவற்றை முதலில் உறுதி செய்து கொள்ளவும்.
2. இணையத்தில் வாங்க இருப்பதால், அந்த பொருளின் படம் மற்றும் விற்பவர் அது குறித்து தரும் தகவல்கள் மட்டுமே நமக்குத் தெரிய வரும். இது போதாது. வாங்க விரும்பும் பொருள் குறித்து இணையத் தளங்களுக்குச் சென்று தகவல் தேடிப் பெறவும். அவற்றை ஏற்கனவே வாங்கியவர்கள், அதன் பயன் மற்றும் நம்பகத் தன்மை குறித்து இணையத்தில் எழுதி இருப்பார்கள். அவற்றைப் படித்துப் பார்க்கவும்.பொருளின் விலை மட்டும் பார்க்காமல், வரி, அவற்றை உங்களிடம் சேர்ப்பிக்க இணைய தள விற்பனை மையம் வசூலிக்கும் ட்ரான்ஸ்போர்ட் மற்றும் பேக்கிங் கட்டணம் போன்றவற்றையும் சேர்த்துப் பார்க்கவும்.
3. பொருள் பிடிக்காமல் போனால், அதனை மீண்டும் அந்த கடைக்காரர் எடுத்துக் கொள்வாரா? எடுத்துக் கொள்வார் எனில், அதற்கான நடைமுறை என்ன? என்பன போன்ற தகவல்களைப் பெறவும்.
4. ஆர்டர் செய்து வாங்க முடிவு செய்து, ஆன் லைனிலேயே ஆர்டர் கொடுத்தால், நீங்கள் ஆர்டர் கொடுக்கும் பக்கத்தினை எச்.டி.எம்.எல். பக்கமாக சேவ் செய்து வைக்கவும். உங்கள் வங்கி அட்டை எண், பணப் பரிவர்த்தனைக்குக் கொடுக்கப்படும் எண், நாள், பொருள் விலை மற்றும் பிற கட்டணங்கள் ஆகிய தகவல்கள் அனைத்தும் இருக்க வேண்டும்.
5.உங்களுடைய கிரெடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்டினை அடிக்கடி சோதனை செய்திடவும். நீங்கள் வாங்காத பொருளுக்கு ஏதேனும் பணம் எடுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
6. உங்கள் இல்ல மற்றும் நம்பிக்கையான அலுவலகக் கம்ப்யூட்டர் மூலமாக மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடவும். பொதுவான மையங்களில் இந்த வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதை அறவே தவிர்க்கவும்.
7.உங்கள் பாஸ்வேர்டினைப் பாதுக்காக்கவும். மிகவும் உறுதியான பாஸ்வேர்டாக அமைத்து வைத்துக் கொள்ளவும். இதனையும், அடிக்கடி மாற்றவும்.
8.பிரபலமான கடைகளின் இணையத் தளங்கள் போலத் தோற்றமளித்து, ஆன்லைன் வர்த்தகத்தினை மேற்கொள்ள வழி தரும் மெயில்கள் மற்றும் தளங்களை நம்பக் கூடாது.
9. ஆன்லைன் வர்த்தக இணைய தளங்களின் முகவரியில் “https” என்ற முன்னொட்டு இருக்கிறதா எனச் சோதனை செய்திடவும். இது போல “http” உடன் “s” இணைந்து இல்லை என்றால், சற்று சிந்திக்கவும். தயங்கவும்.
10.கூடுமானவரை டெபிட் கார்டுகளை ஆன்லைன் வர்த்தகத்தில் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். கிரெடிட் கார்டுகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு உண்டு.
11. கூடுதல் சலுகைகள், அதிரடி ஆபர்கள் என மெயில்கள் வந்தால், சற்று நிதானிக்கவும். இதெல்லாம், உங்களை சிக்க வைத்திடும் தூண்டில்கள். எனவே இவற்றை அலட்சியப்படுத்தவும்.

இணையதளத்தின் எதிர்கால இதயம் சீனா : கூகுள்

இணையதளத்தின் எதிர்கால இதயம் சீனா. தேடுதல் தவிர வரைபடம் மற்றும் விளம்பரம் போன்ற பிற பகுதிகளும் சீனாவில் 'கூகுள்' வளர்ச்சி பெறுவதற்கான இடங்களாக திகழ்கின்றன' என, 'கூகுள்' நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 2006ல் 'கூகுள்' நிறுவனம் தனது 'தேடுபொறி'யை சீனாவில் நிறுவியது. மிகக்குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்தது. இந்நிலையில், 'தியான்மென்' சதுக்கப் படுகொலை போன்ற, கடந்த சீன அரசின் அட்டூழியங்களை குறிக்கும் தகவல்களை தணிக்கை செய்ய வேண்டும் என, சீன அரசு உத்தரவிட்டது.
அதையேற்ற 'கூகுள்' சில விஷயங்களை தணிக்கை செய்தது. ஆனால் சீனா தொடர்ந்து 'கூகுளுக்கு' நெருக்கடி கொடுத்து வந்தது. இதற்கிடையில் அந்நிறுவனத்தில் இ-மெயில்கள் சில இணையதள திருடர்களால் திருடப்பட்டன.
சீனா இதுகுறித்து விசாரிப்பதாக கூறிவந்ததே ஒழிய, நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இப்பிரச்னை ஒரு நிலையில் முற்றி, கடந்த மார்ச் முதல் சீனாவில் தனது 'தேடுபொறி'யை நிறுத்தி விட்டது கூகுள்.
அதையடுத்து கூகுளின் தேடுபொறி, ஹாங்காங்கில் இருந்தபடி செயல்படத் துவங்கியது. இதனால் அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் பெரும்பகுதியை சீன தேடுபொறி நிறுவனமான 'பெய்டு'விடம் இழந்தது.
அதன்பின் கடந்த ஜூலையில், ஹாங்காங்கிற்கு சேவையை திருப்பி விடுவதை 'கூகுள்' நிறுத்தியது. அதன்பின் சீன அரசு, அந்நிறுவனத்துக்கான உரிமத்தை புதுப்பித்தது.
இந்நிலையில் நேற்று சீன தலைநகர் பீஜிங்கில் பேசிய அந்நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி துறையின் துணைத் தலைவர் ஆலன் எஸ்டேஸ் கூறியதாவது: இணையதளத்தின் எதிர்கால இதயமாக சீனா திகழ்கிறது. தேடுதல் என்பது தவிர, வரைபடம் மற்றும் விளம்பரங்களை வெளியிடுவது போன்ற எண்ணற்ற துறைகள் இணையதள உலகில் உள்ளன.
அவற்றை நம்மால் கண்டுபிடிக்க முடியும். சீனாவை பொறுத்தவரை 'கூகுள்' ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. ஒரு மகத்தான புரட்சிக்கு அது வழிகாட்டும் என நம்புகிறேன். 'கூகுள்' மீது சீன அரசு தாக்குதல் தொடுத்தது என்ற 'விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவண வெளியீடு பற்றி எங்களிடம் ஆதாரம் எதுவும் இல்லை. இவ்வாறு ஆலன் தெரிவித்தார்.

இணையத்தின் பிடியிலிருந்து சிறுவர்களை எப்படி பாதுகாக்கலாம்?

இணையம் என்பது உலகலாவில் பரந்துபட்ட ஓர் வலையமைப்பு ஆகும். இணையத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் காணக்கிடைத்தாலும் அதற்கு நிகராக தீய விடயங்களும் காணப்படத்தான் செய்கின்றன.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக சிறுவர்கள் காணப்படுகின்றனர். இணையத்தின் உண்மைத்தன்மையை புரியக்கூடிய வயது
அவர்களுக்கு இல்லாத பட்சத்தில் தற்போது சமூக வலையமைப்புக்கல் மற்றும் அரட்டை அறைகள் போன்றவற்றிலே அதிகமான தவறுகள் நடக்குமிடமாக காணப்படுகின்றது.
கட்டிளமைப்பருவத்தில் அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என புரிந்து கொள்வது கடினமாகவிருக்கும் ஆனால் இதுவே அவர்களின் வாழ்க்கையை பாதாளத்துக்கு இட்டுச்சென்று விடும். பெற்றோர் இது தொடர்பாக கவனமெடுக்கவேண்டும்.சிறுவர்களை இணைய செயற்பாடுகளில் இருந்து பாதுகாப்பதற்கு மேலத்தேய நாடுகளில் கடினமான சட்டங்கள் அமுலில் உள்ளது. எனும் பாதிக்கப்படுபவர்கள் பாதிக்கப்பட்டுக கொண்டுதான் இருக்கின்றனர்.
சரி நாம் இன் இவற்றில் இருந்து எப்படி சிறுவர்களை பாதுகாக்கலாம் என இனிப் பார்ப்போம்.
விடுகளில் சிறுவர்கள் இணையத்திளை பாவிக்கும் சந்தர்ப்பங்களில் பில்டர்களினை (Cyper patrol) உபயோகிக்கலாம். உதாரணமாக தேடுபொறிகள் அதிகமாக ஆபாசத் தளங்களையே முன்னிலைப்படுத்திக்’ காட்டும் ஏனெனில் அதுதான் அவர்களின் விளம்பர உத்தி.
நாம் இவ் பில்டர்களை பாவிக்கும் போது நாம் குறிப்பிட்ட சொற்களை இணையத்தில் காட்டாத பிரசுரிக்காத வண்ணம் நாம் செய்து கொள்ளலாம். மற்றும் சிறுவர்களின் நடவடிக்கைகளினை இணையத்தில் கண்காணிப்பதற்கு கிலோக்கர்களினை (Key logger) உபயோகிக்கலாம். இவை கணணியை இயக்கியதில் இருந்து அவர் கணணியில் என்ன செய்கிறார் என்கின்ற அனைத்து தரவுகளையும் அவருக்குத் தெரியமால் இவை சேமிக்கும். தேவையெனில் நிமிடத்துக்கொரு தரம் கணணியில் என்ன செய்கிறார் என்னபதனை Screen Shot மூலமாக பிடித்து சேமித்தும் வைக்கக் கூடியவை இந்த கீலோக்கர்கள்.
இவற்றினை உபயோகிப்தன் மூலம் சிறார்களுக்கு தெரியமாலே அவர்களினை நாம் பாதுகாக்கலாம்.
குறித்த மென் பொருட்களை தரவிறக்கம் செய்ய கீழ் உள்ளவற்றை பார்க்கவும்
Actualspy Keylogger
Cyper patrol

கூகுளை முந்தியது பேஸ்புக்

இணையதள ஜாம்பவனான கூகுள் சர்ச் இஞ்ஜினை முந்தி முதன்முறையாக பேஸ்புக் சாதனை படைத்துள்ளது. அமெரி்க்காவில், கூகுள் சர்ச் இஞ்ஜினைக் காட்டிலும் பேஸ்புக் இணையதள‌த்தை அதிகம் பயன்படுத்தி உள்ளனர்.
இது குறித்து எக்ஸ்பீரியன் ஹிட்வைஸ் நிறுவனம் ‌நடத்திய கருத்துக்கணி்ப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஜனவரி முதல் நவம்பர் மாத வரையிலான காலகட்டத்தில், சமூகவலைத்தளங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது. கூகுள் பயன்பாடு இரண்டாம் இடத்திலும் (7.2 சதவீதம்), யாகூ மெயில் 3.52 சதவீதம், யாகூ 3.30 சதவீதம், யூடியூப் 2.65 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில், 400 மில்லியன் மக்கள் பேஸ்புக் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.என் ஹொட்மெயிலில் மின்னஞ்சல்கள் மாயம்

பிரபல மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் ஒன்றான மைக்ரோசொப்ட்டின் எம்.எஸ்.என் ஹொட்மெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்த பல மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக முறைபாடுகள் செய்துள்ளனர்.
பாவனையாளர்கள் பலர் தங்களது இன்பொக்ஸில் காணப்பட்ட மின்னஞ்சல்கள் அனைத்தும் டிலீடட் மெயில்ஸ் அதாவது அழிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் போல்டருக்குள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொலில்நுட்பக் கோளாறா அல்லது விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட நாசகார வேலையா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும் அந்நிறுவனம் இக்கோளாறை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது.
ஹொட்மெயில் சேவையானது உலகம் முழுவதும் சுமார் 360 மில்லியின் பாவனையாளர்களைக் கொண்டதென்பதுடன் அதிகமான பாவனையாளர்களைக்கொண்ட மின்னஞ்சல் சேவையாகவும் திகழ்கின்றது.

இணையதளம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், டிசம்பர் மாதத்தில் இணையத்திற்கு நம்மை வழி நடத்தும் பிரவுசர் வெளிவந்தது. அதனை வெளியிட்ட டிம் பெர்னர்ஸ் லீ, அதற்கு WorldWideWeb என்றே பெயர் சூட்டி இருந்தார்.
இன்று பல நிறுவனங்களின் பிரவுசர்கள் நம்மை போட்டி போட்டு அழைக்கின்றன. இந்த பிரவுசர்களுடனே வரும் ஆபத்துக்களும் நம்மை உஷார் படுத்துகின்றன. இருப்பினும் இவை இன்றி நாம் நம் வாழ்வை இயக்க முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம். இந்த இருபது ஆண்டு காலத்தில் வந்த சில பிரபலமான பிரவுசர்கள் குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
1.WorldWideWeb (1990):
உலகின் முதல் இன்டர்நெட் பிரவுசர். இன்றைய பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு கற்காலத்து மனிதன். கிராபிக்ஸ் எதுவும் இல்லாத குறிப்பிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டும் இயங்கிய பிரவுசர். ஆனால் இந்த பிரவுசரில் இருந்தபடியே இணைய தளப் பக்கங்களை எடிட் செய்திட முடிந்தது இதன் சிறப்பாக இருந்தது.
2.ViolaWWW (1992):
யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய வகையில் வெளியான முதல் பிரவுசர். முதன் முதலாக, பார்த்த இணைய தளங்களுக்கு முன்னும் பின்னும் செல்வதற்கும், ஹோம் பக்கத்தை அணுகுவதற்கும் வசதிகள் தரப்பட்டன. ஸ்டைல் ஷிட், ஸ்கிரிப்டிங் லாங்குவேஜ் போன்ற தொழில் நுட்ப வசதிகளும் அளிக்கப்பட்டன.
3. Cello (1993):
விண்டோஸ் (பதிப்பு 3.0) இயக்கத்தில் செயல்படும் வகையில் உருவான முதல் பிரவுசர். இதனை உருவாக்கிய தாமஸ் புரூஸ், வழக்குரைஞர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை இதன் மூலம் பெறுவதற்காக வடிவமைத்துத் தந்தார். பெற்ற தகவல்கள் ஹைப்பர் டெக்ஸ்ட் பார்மட்டிலேயே இருந்தன.
4. Lynx 2.0 (1993):
இது உலகின் இரண்டாவது பிரவுசர். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றுமே பெற முடிந்தது. இதனால் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கிய கம்ப்யூட்டர்களில் இது இயங்கியது. 1993 வரை இது பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப் பட்டது. டெக்ஸ்ட் மட்டும் தேவைப்பட்டவர்களால் அதிகம் நாடப்பட்டது. இன்றும் சிலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
5. NCSA Mosaic 1.0 (1993):
மிக எளிமையான இயக்கத்திற்கு வழி வகுத்த முதல் பிரவுசர். இதனால் சாமானியர்களும் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கியது. டெக்ஸ்ட் உள்ளாக படங்களையும் காட்டியது.
6. NCSA Mosaic 1.0 (1993):
ஐ.பி.எம். நிறுவனம் இணைய உலாவித் தொகுப்புகளில் இந்த தொகுப்புடன் தான் நுழைந்தது. ஏற்கனவே மொசைக் அடிப்படையில் பிரவுசர்களை உருவாக்கியது. ஆனால், அது அந்நிறுவன கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் மட்டும் இயங்கியது. இது சிறப்பாகப் பேசப்பட்டாலும் குறிப்பிட்ட சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களில் மட்டுமே இயங்கியதால், அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.
7. Netscape Navigator 1.0 (1994):
மொசைக் பிரவுசர் தயாரித்த வல்லுனர்கள் சிலர், அந்நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்து, தனியே ஒரு பிரவுசரை உருவாக்கினார்கள். அதுவே நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பதிப்பு 1. இதன் எளிமை, வேகம் மக்களை அதிகமாகக் கவர்ந்ததனால், அதுவே பெரும்பாலானவர்களின் பிரவுசராக இடம் பெற்றது.
8.Microsoft Internet Explorer 1.0 (1995):
நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பிரவுசருக்குக் கிடைத்த புகழைப் பார்த்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தானும் இந்த பிரிவில் இறங்கி, தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தந்தது. முதலில் அரைவேக்காடாக இருந்த இந்த பிரவுசர் நாளடைவில் மேம்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக இயங்குகிறது.
9.Netscape Navigator 3.0 (1996):
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மக்களிடம் பெரிய அளவில் சென்றடையும் முன்னர், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பதிப்பு 3, மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பதிப்பில் ஆடியோ,வீடியோ மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் சப்போர்ட் தரப்பட்டது, மக்களை இதனுடன் ஒட்டவைத்தது. இது அவ்வப்போது கிராஷ் ஆனாலும், மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.
10. Opera 2.0 (1996):
நோர்வே நாட்டைச் சேர்ந்த ஆப்பரா நிறுவனம் தன் முதல் ஆப்பரா பிரவுசரை 1996ல் கொண்டு வந்தது. நெட்ஸ்கேப் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தொகுப்புகளில் பிரச்னையைச் சந்தித்த மக்கள், ஒரு மாற்றாக இதனைப் பயன்படுத்தினார்கள். இணையத்திற்கென வரையறை செய்யப்பட்ட பொதுவான கொள்கைகளுக்கிணங்க இது இயங்கியதால், இணைய தளம் தயாரிப்பவர் களுக்கு இது மிகவும் பிடித்த பிரவுசராக இருந்தது.
11.KDE Konqueror (2000):
இது வெப் பிரவுசராக மட்டுமின்றி, ஒரு பைல் மேனேஜராகவும் இருந்தது. யூனிக்ஸ் மற்றும் ஓப்பன் சோர்ஸ் இயக்கங்களுக்கு ஏற்றதாக இயங்கியது. பின்னாளில் வந்த சபாரி வெப் பிரவுசருக்கான அடிப்படையைத் தந்தது.
12. Microsoft Internet Explorer 5 for Mac (2001):


மேக் ஓ.எஸ். எக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஒரு பிரவுசர் தேவைப்பட்ட போது, மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கிடையே அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேக் சிஸ்டத்திற்கான பிரவுசரை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
13. Microsoft Internet Explorer 6.0 (2001):
பிரவுசர் யுத்தத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை உச்சத்திற்குக் கொண்டு போன பிரவுசர். இருப்பினும் பின்னாளில் ஹேக்கர்கள் இதன் பலவீனங்களைக் கண்டறிந்து செயல்பட்டபோது, மக்கள் சற்று பயத்துடனே இதனைப் பயன்படுத்தினர். மாற்று பிரவுசருக்குக் காத்திருந்தனர்.
14. Netscape 7 (2002):
தன்னுடைய பிரவுசரைப் பயன்படுத்திய பலர், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குத் தாவியதனால், தன் பங்கினை நிலை நிறுத்த, நெட்ஸ்கேப் நிறுவனம் இந்த பதிப்பினை வெளியிட்டது. இதனுடைய குறியீட்டு வரிகளில் பெரும்பாலானவை ஓப்பன் சோர்ஸ் முறையில் மற்றவர்களுக்கு இலவசமாகக் கிடைத்தன.
இருந்தும் இந்த பிரவுசரினால், மைக்ரோசாப்ட நிறுவனத்திற்கு முன் நிற்க இயலவில்லை. ஆனால், இந்த பிரவுசரே, ஓப்பன் சோர்ஸ் முறையில் மொஸில்லா நிறுவனத்தை, பயர்பாக்ஸ் பிரவுசரைக் கொண்டு வரத் தூண்டுதலாய் இருந்தது. பின்னாளில், மொஸில்லாவின் சில தொழில் நுட்பத்தினை, நெட்ஸ்கேப் கொண்டு வந்தாலும், மைக்ரோசாப்ட் முன்னால், நெட்ஸ்கேப் மறைந்தே போனது.
15. Mozilla Phoenix 0.1 (2002):
நெட்ஸ்கேப்பின் சாம்பலில் இருந்து மொஸில்லா உருவாக்கிய பிரவுசர் இது. எளிமை, வேகம், நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு இயக்கம், உருவாக்கம் ஆகியவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு பிரவுசர்களை அமைப்பதாக மொஸில்லா அறிவித்து, இந்த பிரவுசரைக் கொண்டு வந்தது. இதுவே பின்னாளில் பயர்பேர்ட் (Firebird) மற்றும் பயர்பாக்ஸ் (Firefox) ஆக மாறியது.
16. Apple Safari Public Beta (2003):
மேக் சிஸ்டத்திற்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5, மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமாகக் கருதப்பட்டதால், ஆப்பிள் நிறுவனம் தன் சொந்த முயற்சியில், தன்னுடைய மேக் கம்ப்யூட்டர்களுக்கு பிரவுசர் ஒன்றை உருவாக்கியது. பின்னாளில் இது சபாரி என்ற பெயரில் இடம் பிடித்தது.
17. Mozilla Firefox 1.0 (2004):
தன் சோதனைத் தொகுப்புகள், மக்களிடையே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, மொஸில்லா நிறுவனம் பயர்பாக்ஸ் பிரவுசரை வெளியிட்டது. மிக அதிகமாக மக்களால் டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர் என்ற பெயரைப் பெற்றது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட்டால் வேறு வழியில்லை என்று இருந்த மக்கள், பயர்பாக்ஸ் பக்கம் செல்ல, மைக்ரோசாப்ட் பிரவுசர் சந்தையில் தன் பங்கினை இழக்கத் தொடங்கியது.
18. Google Chrome Beta (2008):
தேடல் இஞ்சினில் தன் இடத்தைப் பரவலாகவும், ஆழமாகவும் மக்கள் மனதில் பிடித்த கூகுள் நிறுவனம் தனக்கென ஒரு பிரவுசரை வடிவமைக்க விரும்பி, குரோம் பிரவுசரை வெளியிட்டது. வேகத்தை முதன்மையாகக் கொண்டு இயங்கும் இந்த பிரவுசர் இன்றும் மற்ற பிரவுசர்களின் இடத்தைக் கைப்பற்றும் முயற்சியில் சிறிது சிறிதாக வெற்றி பெற்று வருகிறது.
இன்னும் பல பிரவுசர்கள் இருந்தாலும், இந்த பிரவுசர்களே, தனிப்பட்ட தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு, பிரவுசர் சந்தையில் தங்களுக்கென இடம் பிடித்தவையாக உள்ளன.

ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள "டிவிட்டர் ஜோசியம்"

ஒருவர் டிவிட்டர் செய்வதை வைத்தே அவர் எப்படிபட்டவர் என்பதை ஓரளவு கணித்து விடலாம். உதாரண‌மாக தொடர்ச்சியாக திரைப்படங்கள் பற்றிய பதிவுகளை வெளியிடுபவரை சினிமா பிரியர் என்றோ, எந்த டிவிட்டர் பதிவுக்கும் எதிர் கருத்து பதிவு செய்பவரை விவாத பிரியர் என்றோ கணிப்பது சுலபமானது.

ஒருவருடைய டிவிட்டர் பதிவுகளை படிக்கும் போது அவரை பற்றிய ஒரு கருத்து மனதில் தோன்றுவது அனைவருக்கும் இயல்பான ஒன்று. இந்த க‌ருத்து சரியானது தானா என்று சோதிக்க விரும்பினால் ட்வீட்சைக்(Tweetpsych) இணையதள‌த்தை நாடலாம்.

டிவிட்டர் பதிவாளர்கள் பற்றிய உளவியல் சிந்தனையை வழங்குவதாக இந்த தளம் தெரிவிக்கிறது. அதாவது இந்த தளமானது உளவியல் ஆலோசகர் போல டிவிட்டர் பதிவுகளை அலசி ஆராய்ந்து அந்த பதிவுகளை வெளியிட்டவர் பற்றிய அறிக்கையைத் தருகிறது.

எந்த நபரைப் பற்றி அறிய வேண்டுமோ அவரது டிவிட்டர் முகவரியை இந்த தளத்தில் சமர்பித்தால் உடனே அவரைப்பற்றியை அறிக்கையை தந்து விடும்.

அந்த நபருடைய எண்கள், பணம், நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலம், கட்டுப்பாடு, உணர்வுகள், புரிதல் என பல்வேறு தலைப்புகளை ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள "டிவிட்டர் ஜோசியம்"bட்டியலிட்டு ஒவ்வொரு விஷயத்திலும் அவருடைய டிவிட்டர் பதிவுகள் எப்படி அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகிற‌து.

குறும்பதிவுகள் எந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமாக இருக்கின்றன, எந்த அளவுக்கு சமூகத்தன்மை மிக்கவையாக இருக்கின்றன என்பதையெல்லாம் அறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது.

இந்த சாப்ட்வேர் உருவாக்கித்தரும் ஆய்வுகள் அனைத்தும் எந்திரதனமானது என்றாலும் அனைத்து விவரங்களும் அறிவியல் பூர்வமாக இருக்கின்றன.

ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் டிவிட்டர் பதிவுகளை ச‌மர்பித்து ஆய்வு செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி

பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை

பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.
பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள்.
மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.

பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்தாவிட்டாலும், சிலவற்றை அதிலிருந்து தான் பெற முடியும். ஏனென்றால், மைக்ரோசாப்ட் தான் உருவாக்கிய விண்டோஸில் இருந்து கொண்டு மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்துகிறாயா!

இது வேண்டுமென்றால், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குச் செல் எனச் சொல்கிறது. சில வேளைகளில், குறிப்பிட்ட இணைய தளம், அது உங்களின் தளமாகவே இருக்கலாம், எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் செயல்படுகிறது என நீங்கள் அறிய விரும்பலாம்.
அந்த வேளையில், பயர்பாக்ஸ் பிரவுசரிலிருந்து வெளியேறி, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைக் கிளிக் செய்து, பின் உங்கள் வேலையைத் தொடர வேண்டியதில்லை. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரிலேயே, ஒரு டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை வைத்துக் கொள்ளலாம்.
இந்த டேப்பில் கிளிக் செய்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விரிந்து, உங்கள் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும். இவை IE Tab for Firefox, IE tab for Chromeஎன அழைக்கப்படுகின்றன.
நீங்கள் பயன்படுத்தும், ஒவ்வொரு பிரவுசரிலும், ஒவ்வொரு கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரிலும் பல புக்மார்க்குகளை வைத்திருக்கிறீர்களா! இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க முடிவதில்லையா! உங்களுக்காகவே, எக்ஸ் மார்க்ஸ் (XMarks)என்ற ஒரு ஆட் ஆன் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், அனைத்து பிரவுசர்களிலும் அல்லது நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் உள்ள புக்மார்க்குகளை, இது தேடி எடுத்து இணைத்துத் தந்துவிடும்.

பேஸ்புக் வைரஸ் எச்சரிக்கை

சென்ற வாரம் பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பலர் ஏமாற்றப்பட்டு, ஒரு விளம்பர சதிக்கு ஆளானார்கள். உலகெங்கும் உள்ள பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.
பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு, அதில் உள்ள உறுப்பினர் ஒருவர் அனுப்புவது போல மெசேஜ் ஒன்று வருகிறது. அதில், இந்த இடத்தில் கிளிக் செய்தால், இதுவரை நீங்கள் பார்க்காத பாலியியல் படத்தைப் பார்க்கலாம் என்று ஒரு லிங்க் கொடுக்கப்படுகிறது. இந்த வீடியோ காட்சிக்கு ‘distracting beach babes’ என்று பெயர் தரப்பட்டுள்ளது. சிறிய அளவில், அரைகுறை ஆடையுடன், ஒரு படம் காட்டப்படுகிறது. இதனால் கவனம் திருப்பப்பட்டவர்கள், இந்த படத்தில் கிளிக் செய்கையில், படம் இயக்கப்படாமல் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு, இந்த படம் இயக்குவதற்கான சாப்ட்வேர் உங்களிடம் இல்லை என்றும், அதற்கான சாப்ட்வேர் பெற இங்கு கிளிக் செய்திடவும் என்ற செய்தி கிடைக்கிறது. பின்னர் வருமானம் கிடைக்கும் விளம்பர அட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பதியப்படுகிறது. அத்துடன் மற்ற பேஸ்புக் நண்பர்களுக்கு இதே முறையில் செய்தி அனுப்பப்படுகிறது. ஏறத்தாழ 50 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் தளம், தன் தளத்தின் பாதுகாப்பு வழிகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும். இது போல ஏதேனும் பொய் விளம்பரங்கள் கிடைக்கையில், தகுந்த எச்சரிக்கை செய்திகளை அனைவருக்கும் அனுப்ப வேண்டும். ஏற்கனவே இந்த அப்ளிகேஷனுக்கான லிங்க்கில் கிளிக் செய்தவர்கள், தங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இதனை நீக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.
பேஸ்புக் தளத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகையில் அது குறித்து ஆய்வு செய்து தகவல்களைத் தரும் சோபோஸ் குரூப் (Sophos)  என்ற முகவரியில், தள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை செய்தியையும், தகவல்களையும் தந்துள்ளது.

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இணையதள பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ், எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக தளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் நட்பு வட்டாரத்திற்கு ஸ்பேம் தகவல் ஒன்றை அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக அது எச்சரித்துள்ளது.

லைக் ஜக்கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இரையாகியுள்ளனர் என்று சோஃபோஸ் நிறுவனம் தனது வலைப்பதிவுகளில் தெரிவித்துள்ளது.

இந்த மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்கிறார் என்ற தகவலுடன் ஒரு செய்தி ஏராளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் அது ஊக்குவிக்கிறது.

அவ்வாறு கிளிக் செய்யும் போது, ஒரு வெற்றுப்பக்கம் தோன்றி, மேலும் தொடர இங்கே கிளிக் செய்யவும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
அதைக் கிளிக் செய்தால் மீண்டும் அதேபோன்றதொரு தகவல் வருகிறது. மேலும் இந்தத் தகவலை ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் இந்தத் தகவல் அனைவருக்கும் பரவி வருகிறது என்று சோஃபோஸ் எச்சரித்துள்ளது.

உங்கள் கம்ப்யூட்டரில் தானாகவே விளம்பரங்களை பதிவிறக்கம் செய்யும் மென்பொருள் ஒன்றை உங்களது கம்ப்யூட்டரில் பொருத்துவதற்கான ஒரு மோசடி ஃபேஸ்புக்கில் நடப்பதாக சோஃபோளூ; கடந்த வாரத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.