| ஒரு இணையதளத்தின் வெற்றிக்கு அதன் பெயருக்கும் முக்கிய பங்கு உண்டு. எனவே தான் இணைய உலகில் வெற்றி பெற நினைப்பவர்கள் முதலில் அசத்தலான பெயரை தேட முற்படுகின்றனர். அதற்கு காரணம் இதன் உள்ளடக்கம் தான். காதலியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வழி காட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் அதனையே தலைப்பாக சூடிக்கொண்டுவிட்டது. ஒரு மேம்பட்ட காதலனாக இருங்கள் என்று கூறும் இந்த தளம் அதற்கான வழியாக காதலியின் பிறந்த நாளை மறக்காமல் இருந்து வாழ்த்து சொல்வது போன்ற அம்சங்களை வலியுறுத்துகிறது. காதலி தொடர்பான முக்கிய தினங்களை நினைவூட்டுவது, காதலி அகமகிழ்ந்து போகக்கூடிய பரிசு பொருள் வாங்கித்தர உதவுவது, தேவைப்பட்டால் காதல் ஆலோசனைகளை தருவது போன்ற சேவைகளை வழங்குகிறது. காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது பொருத்தமானதே. சொந்த உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டு பின்னர் மற்ற காதலர்களுக்கும் உதவும் என்பதால் இந்த தளம் அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லா தகவல்களுமே நடைமுறை சாத்தியம் கொண்டதாக, சுவையானதாக இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் ஆலோசனைகளும் வழிகளும் உருவாக்கப்பட்டுள்ளனவாம். காதலியை கவர்வதற்கான ஆலோசனைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. காதலன்களுக்கான ஆலோசனை மட்டும் தானா? காதலிகளுக்கு எதுவும் இல்லையா என்று கேட்கலாம். கவலையே வேண்டாம் பெண்களுக்கு என்று தனிப்பகுதி உள்ளது. காதலர்களுக்கு உதவுங்கள் என்று அழைக்கும் அந்த பகுதி காதலிகள் தங்கள் எதிர்பார்ப்பையும், மனதையும் தெரிவிக்க வழி செய்கிறது. ஆனால் காதலன்களை கவர்வதற்கான வழிகள் இல்லை. இணையதள முகவரி |
Friday, 25 March 2011
காதலர்களுக்கான ஒரு இணையதளம்
Labels:
INTERNET NEWS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment